கோல மயில் கோலாலம்பூர் வருகின்றது

Image may contain: 1 person, close-up

மலேசியாவில் அடுத்தமாதம் நட்சத்திர கலைவிழா நடக்கபோகின்றதாம், தலைவி வருவதாக அறிவிப்பும் செய்தாயிற்று

விமான நிலையம் முதல் அரங்கம் வரை பெரும் வரவேற்பு பேனர் வைக்கலாம் என்றால் இங்கு அனுமதிக்கமாட்டார்கள், அதெல்லாம் வாய்ப்பே இல்லை

ஆனானபட்ட மன்மோகன் சிங் மோடி வந்தால் கூட பத்தோடு பதினொன்றுதான்

மோடி என்ன டிரம்ப் வந்தாலே கூட ஒரு பரபரப்பும் இருக்காது

இந்த சிக்கல் இல்லாவிட்டால் கோலாலம்பூர் இரட்டை கோபுரம் அளவிற்கு பெரும் பேனர் வைத்து அசத்திவிடலாம்

ஆனால் வாய்பில்லை

இதில் தலைவிக்கு எப்படி பிரமாண்ட வரவேற்பு அளிப்பது என சங்கம் தீவிர ஆலோசனையில் இருக்கின்றது, உலகமே அதிரும் வண்ணம் தலைவிக்கு வரவேற்பு இருக்க வேண்டுமே என்ற கவலையில் சங்கம் மூழ்கிவிட்டது.

எப்படியாவது தலைவியினை சந்தித்து சங்கத்தை பற்றியும் அதன் செயல்பாடு, கோட்பாடு, கட்டுபாடு இன்னும் அதுபடும் பல பாடுகளைபற்றியும் எடுத்து சொல்லிவிட வேண்டும்

தலைவி வருகின்றார் என்றவுடன் அழகான மலேசியா இன்னும் அழகாக தெரிகின்றது

“கோல மயில் கோலாலம்பூர் வருகின்றது”.