பணம் கொடுப்பதை தடுக்க திடீர் சோதனை நடத்துவோம்: தேர்தல் அதிகாரி பேட்டி

பணம் கொடுப்பதை தடுக்க திடீர் சோதனை நடத்துவோம்: தேர்தல் அதிகாரி பேட்டி

அவர்கள் என்ன குழாயில் நீர் வருவது போலவா எப்பொழுதும் கொடுத்துகொண்டிருப்பார்கள்?

அவர்களே திடீர் என்றுதான் கொடுப்பார்கள், அதனை இவர் திடீர் என சென்று தடுப்பாராம்.

இணையம் முதல் இன்னும் பல இணைப்புகள் வரை பணம் கொடுக்க ஏகபட்ட வழிகள் இருக்கின்றன, கேஷ்லெஸ் இன்டியா என்பது தேர்தலில் பணம் கொடுக்கும் வகையிலும் வந்தாயிற்று

வோட்டுக்கு இணையத்தில் “பிட் காய்ன்” கொடுக்கும் அளவிற்கு அவர்கள் சென்றாயிற்று, இதில் இவர் இன்னமும் முதல் உலகப்போர் காலத்திலே இருக்கின்றார்


குமரி புயல் அழிவு தேசிய பேரிடராக அறிவிக்க‌ தமிழக அதிமுக எம்பிக்கள் டெல்லியில் போராட்டம்

புயல் அடித்து எவ்வளவு நாள் ஆகின்றது?, இவர்களுக்கு இப்பொழுதுதான் செய்தி சென்றிருக்கின்றது, நல்ல வேளையாக அடுத்த புயல் அடிக்கு முன் கேட்டுவிட்டார்கள்

எவ்வளவு வேகம் பார்த்தீர்களா? நேற்று இரவில்தான் ஜெயா கனவில் வந்து போராடுங்கள் என சொல்லியிருக்கும் போல‌