குமரி மீணவர்களுக்காக பலர் போராட கிளம்பிவிட்டார்களாம்
குமரி மீணவர்களுக்காக பலர் போராட கிளம்பிவிட்டார்களாம்,
எப்பொழுது? கன்னியாகுமரியில் மீணவர்கள் பாதிக்கபட்டுவிட்டார்களாம் அதனால் ஓடோடி சென்று எல்லோரும் மீணவர்கள் பாவம், அவர்களுக்கு அந்த வசதி வேண்டும், இது வேண்டும், போராட வந்துவிட்டோம் என குதிக்கின்றார்கள்
இப்பொழுது திருமுருகன் காந்தியும் வந்துவிட்டாராம்
இந்த அல்ட்ராசிட்டிகள் கூடன்குளம் பக்கமோ அல்லது தாதுமணலால் பாதிக்கபட்ட தென்கிழக்கு தமிழக கடற்கைரையோரம் செல்லுமா என்றால் செல்லாது
கடத்தல் கும்பல்களால் பாதிக்கபடும் வேதாரணம், கீழக்கரை பகுதிக்கு செல்லுமா என்றால் நிச்சயம் செல்லாது
தயா தேவதாஸ், வைகுண்டராஜன் பிரதர்ஸ் என கிழக்கு கடற்கரையில் மீணவர்கள் வாழ்வினை பாதித்த மணல் நிறுவணங்கள் ஏராளம் அங்கெல்லாம் செல்வார்களா என்றால் மாட்டார்கள்
காரணம் அந்த சக்திகளை எதிர்க்கமாட்டார்கள்
இப்பொழுது இவர்களுக்கு கிடைத்திருப்பது கன்னியாகுமரி மீணவர்கள், அதுவும் அப்பகுதியில் மணல் கம்பெனிகள் உண்டு அங்கெல்லாம் காட்டாத அக்கறை மிக சரியாக மத்திய அரசின் துறைமுகம் அமையும் பகுதியில்தான் வருமாம்
கேட்டால் நாங்கள் போராளிகள் என்பார்கள்
ஆக மணல் கம்பெனியினால் பாதிக்கபட்டவன் , அணுவுலையிலானால் அது கூடங்குளமோ கல்பாக்கமோ அங்கெல்லாம் பாதிக்கபட்டவன் எல்லாம் மீணவனே அல்ல, மறாக கன்னியாகுமரியில் பாதிக்கபட்டவனே மீணவன்
இதனை சொல்பவர்கள் பெயர் போராளிகள், நம்பிகொள்ளுங்கள்.