ஜெயா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு
ஜெயா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு
ஒரு வழியாக வந்துவிட்டதா? ஏன் இவ்வளவு நாளும் மறைத்தார்கள் இப்பொழுது வெளியிட்டார்கள்.
இவ்வளவு நாளும் அப்படி இல்லை, சிசிடிவி இல்லை, கேமரா இல்லை என சொன்னவர்கள் இப்பொழுது சத்தமே இல்லை
ஒரு மண்ணாங்கட்டியும் புரியவில்லை
ஆக ஜெயாவின் அப்பல்லோ வீடியோ ஆர்.கே நகர் தேர்தலுக்கு முன்பாக வந்திருக்கின்றது, இனி அடுத்த அடுத்த தேர்தல் வரும் பொழுது இன்னும் பல வீடியோக்கள் வரலாம்
அது வரட்டும்
ஆனால் இந்த வீடியோவின் உண்மைதன்மை எப்படி என தெரியவில்லை. ஜெயலலிதாவிற்கு இரட்டை சடை எல்லாம் பள்ளி மாணவி போல் போட்டிருக்கின்றார்கள். அதுவும் கருப்பாக இருக்கின்றது
மருத்துவமனையில் கொண்டை அல்லது திருப்பதி கோலத்தில்தான் அமர்த்துவார்கள் இது என்ன இரட்டை சடை?
ஏதும் கேட்டால் “தலைவாரி பூச்சூடி அக்காவை, அப்பல்ல்லோ அனுப்பினார் சசிகலா” என பாடுவார்கள்
இட்லி சாப்பிட்ட வீடியோ விரைவில் வரும், அதில் சசிகலா அரைத்த சட்னி இருக்குமா என பார்த்துவிடலாம்.
சசிகலாதான் அந்த வீடியோவினை எடுத்தாராம், பின் ஏன் ஜெயா எங்கேயோ முகத்தை திருப்பி வைத்திருக்கின்றார்? சசிகலா மீது அவ்வளவு கோபமோ?
இந்த வீடியோவில் அவர்கள் சொல்லவரும் அம்சம் ஜெயாவிற்கு கால் இருக்கின்றது அதுவும் விரலோடு
வீடியோவில் எதனையோ முறைத்து பார்த்தபடி ஜெயா ஜூஸ் குடிக்கின்றார், அநேகமாக அவர் முறைத்து பார்ப்பது கலைஞர் படமாக இருக்கலாம்
ஆனால் ஒரு விஷயம் உறுத்துகின்றது, நீதிபதி ஆறுமுகசாமி விசாரித்துகொண்டிருக்கும் பொழுது இந்த அதிமுக்கிய தகவலை அவரிடம் கொடுக்காமல் ஏன் இப்படி வெளியிடுகின்றார்கள்
இது நீதிமன்ற அவமதிப்பு.
நீதிமன்ற அவமதிப்புத்தான் உண்டா? நீதிபதி அவமதிப்பு பிரிவெல்லாம் இங்கு இல்லையா?
நிச்சயம் உண்டு, யாரையோ குறிவைத்து வீடியோ வந்திருக்கின்றது, சம்பந்தபட்ட நபர்கள் வகையாக சிக்க போவது உறுதி
அட அந்த வீடியோ அப்பல்லோவில் எடுக்கபடவில்லையாம், ரெட்டி அலறுகின்றார்
அப்படியானால் இது எங்கு எடுக்கபட்ட வீடியோ?
முன்பு குன்ஹாவால் சிறைக்கு அனுப்பபட்டபொழுது பர்பனா அக்ரஹாரா சிறையில் எடுக்கபட்டதாக இருக்குமோ?
“ஜெயலலிதா பற்றி இன்னும் ஏராளமான வீடியோக்கள் உள்ளது” : வெற்றிவேல்
அம்மா அம்ருதா, நிறைய வீடியோ இருக்கின்றதாம், உங்களுக்கு ஏதும் பிரயோசனபடுமா என பார்த்துகொள்வது நல்லது.
உலகிலே மிக மெதுவான , உதவாக்கரை போன் வைத்திருப்பது சசிகலாதான் பாவம்
அவர் கடந்த வருடம் எடுத்த வீடியோ இப்பொழுதுதான் இன்னொருவர் போனிற்கே வந்திருக்கின்றது, ஒரு வீடியோ அனுப்ப 1 வருடம் ஆகும் அளவு மிக பழைய போனை வைத்திருக்கின்றார் சசிகலா
அவரை போய் எஸ்டேட் வாங்கினார், பங்களா வாங்கினார் என்றால் எப்படி? பாவம் அவரிடம் உருப்படியாக ஒரு போன் கூட இல்லை