ஜெயா டிவியில் ஆஸ்பத்திரி வீடியோ வரவே இல்லை….
உலகிற்கு எல்லாம் ஒரு செய்தி என்றால் இந்த ஜெயாடிவிக்கு தனி செய்தி, அந்த டிவி நிருபர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பார்கள் போலிருக்கின்றது
ஊரெல்லாம் ஜெயா வீடியோவினை பற்றி விவாதித்து கொண்டிருந்தால் அந்த டிவி அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவோ அதனை பலர் விவாதிப்பாதகாவோ கண்டு கொள்ளவே இல்லை, தீபாவளி பண்டிகையின் பொழுது செவிடன் அசால்டாக நடப்பது போல நடக்கின்றது
அந்த டிவி 24ம் தேதி எம்ஜிஆர் நினைவு நாளை கொண்டாட தயாராகின்றதாம், ஆர்.கே நகர் தேர்தல் பற்றி நேற்றுவரை தினகரன் வெல்வார், அட இன்று காலைவரை தினகரன் வெல்வார் என சொல்லிகொண்டிருந்த ஜெயா டிவி இன்று தினகரன் என்றொருவர் அந்த தொகுதியில் நிற்கின்றார் என்பதை கூட சொல்லவில்லை
இப்போதைக்கு ஜெயாவின் புகழுக்கு களங்கள் விளைவிப்பவர்களை விடமாட்டோம் என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்
ஜெயாவிற்கு மிகபெரும் களங்கள் விளைவித்தர் என அவர்கள் கண்ணுக்கு தெரிய வேண்டியது நீதிபதி குன்ஹாவும் அந்த டெல்லி நீதிபதியும்
ஒருவேளை அவர்களைத்தான் மிரட்டுகின்றார்களோ என்னமோ?
ஆக ஜெயலலிதா தொடங்கிவைத்த அவரின் சொந்த டிவியில் கூட அவரது ஆஸ்பத்திரி வீடியோ வரவே இல்லை, பாவம் அந்த ஜெயலலிதா