பெரும் துறைமுகம் கன்னியாகுமரி மாவட்டத்தில்…
கொழும்பு துறைமுகத்திற்கு நிகராக பெரும் துறைமுகத்தை கன்னியாகுமரி மாவட்டம் இணையத்தில் தொடங்குகின்றது மத்திய அரசு
இதனை எதிர்த்து கிளம்பிவிட்டார்கள், அய்யகோ இது வாழ்வாதார பிரச்சினை, இது எங்களை அழித்துவிடும் என ஒப்பாரி குரல் தொடங்குகின்றது
இப்படி எல்லாவற்றிலும் அழுதுகொண்டிருந்தால் எங்கிருந்து திட்டங்கள் வரும்? எங்கிருந்து வளர்வார்கள்?
சென்னை வளர்கின்றது, மும்பை வளர்கின்றது என ஒப்பாரி வைக்க வேண்டியது, சரி உங்களையும் வளர்த்துவிடுவோம் என்றால் அய்யோ என் வாழ்வாதாரம் என்னாகும் என குப்புறபடுத்து அடம்பிடிக்க வேண்டியது
எம்மாதிரி மனநிலை இது?
சென்னையும் மும்பையும் ,கொச்சியும் எப்படி வளர்ந்தன? சாட்சாத் துறைமுகங்கள், கொழும்பு எப்படி வளர்ந்தது அதேதான்
சிங்கப்பூரின் துறைமுகம் மட்டும் அமையவில்லை என்றால் என்னாகியிருக்கும்? ஹாங்காக்கும், ஷாங்காயும் இப்படி வளர்ந்திருக்குமா?
ஆனால் இவர்களுக்கு மட்டும் வாழ்வாதாரம் கெடுமாம், எல்லோரும் செத்துவிடுவார்களாம்
இப்படி வெள்ளையன் நினைத்திருந்தால் மும்பையும், சென்னையும், சிங்கப்பூரும் இன்று மீன்மட்டும் பிடித்துகொண்டிருக்கும் ஏரியா ஆகியிருக்கும், இப்படி உருப்பட்டிருக்காது
கன்னியாகுமரிகாரன் நியூயார்க் துறைமுகம் செல்வான், சென்னை செல்வான், மும்பை செல்வான், சிங்கப்பூர் செல்வான், நாளை கொழும்பும் நிச்சயம் செல்வான், ஆஹா ஓஹோ என்பான்
ஆனால் சொந்த ஊரில் துறைமுகம் வர விடமாட்டானாம்
உலகை உற்று பார்த்தால் உருப்படுவீர்கள், மாறாக இப்படி அடம்பிடித்தால் நீங்களும் உருப்படமாட்டீர்கள், உங்களால் தென்மாவட்டமும் உருப்பட விடமாட்டீர்கள்
இதெல்லாம் மிக பெரும் குதர்க்கம், நிச்சயம் சொல்லலாம் இப்படி கூப்பாடு போடுபவர்களை போட்டு சாத்தினால் அவர்கள் பின்னால் இருக்க்கும் சக்திகள், அந்ந்நிய நாட்டு சக்திகள் வெளிவரும்
ஒரு விஷயம் உறுதி
இத்திட்டம் நிறைவேறினால் கொழும்பு பாதிக்கபடும், அதனால் இதனை தடுக்கும் முயற்சி அனைத்திலும் அந்நாடும் கொழும்பில் முதலீடு செய்த பல நாடுகளும் இறங்கும்
அந்த சவாலை இந்தியா நிச்சயம் முறியடிக்க வேண்டும்
இந்திய அரசு மிக உறுதியாக நின்று இத்திட்டத்தை செயல்படுத்தவேண்டும், அதன் பின் அப்பக்கம் பெரும் வளம் நிச்சயம் பெருகும் ,அன்று இவர்கள் எல்லாம் காணாமல் போவார்கள்
இவர்களால் உங்களை தூண்டிவிட்டு ஏமாற்றமுடியுமே அன்றி வேறு ஒரு நல்ல பலனையும் தரமுடியாது
கன்னியாகுமரி மக்களே, இவர்கள் ஓக்கிபுயலை விட மகா ஆபத்தானவர்கள், இவர்களிடம் விழிப்பாய் இருப்பது உங்களுக்கு நல்லது.
உங்கள் சந்ததி உள்நாட்டிலே, உள்ளூரிலே நல்ல வாழ்வு வளமாக வாழ நல்ல வாய்ப்பு இத்துறைமுகம், பயன்படுத்திகொள்வது உங்கள் கையிலே இருக்கின்றது.