மலேசிய டிவி ஒன்று ராமசந்திரனை மறக்கவில்லை

தமிழக டிவிக்கள் மறந்தாலும் மலேசிய டிவி ஒன்று ராமசந்திரனை மறக்கவில்லை, அதி உ.சு.வா (உலகம் சுற்றும் வாலிபன்) ஓடிகொண்டிருக்கின்றது

அதில் மஞ்சுளாவுடன் சுற்றும் விஞ்ஞானி ராமசந்திரனை, அசோகன் பின் தொடர்ந்துகொண்டே இருக்கின்றார், லதா டவுசரை போட்டுகொண்டு அசோகன் பின்னாலே செல்கின்றது

என் கண்டுபிடிப்பு உலகை அழிக்கும் சக்தி கொண்டது, அதனால் அது கெட்டவங்கை கைகளுக்கு செல்லவே கூடாது என ராமசந்திரன் சொல்லும்பொழுதே தள்ளி தொப்பியுடன் நின்று ஒரு மாதிரி ரியாக்ஷன் கொடுக்கின்றா அசோகன்

அந்த காட்சியில் தொப்பியுடன் அசோகனை பார்க்கும்பொழுது தினகரனை பார்த்தது போலவே இருக்கின்றது

தொப்பி அசோகன் கையில் அந்த ரகசியம் சிக்கினால் என்னாயிருக்கும் என படம் சொல்லவில்லை, ஆனால் கட்சி தினகரனிடம் சிக்கினால் என்னாகும் என்பதை தமிழகம் இனி பார்க்கபோகின்றது

அந்த கண்டுபிடிப்பினை உ.சு.வாவில் மறைத்தது போலவே என் கட்சி தமிழகத்தை கெடுத்துவிடும் என ராமசந்திரன் கலைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?