திமுகவிற்கு ஏன் ஆர்.கே நகரில் டெப்பாசிட் போனது

Image may contain: 1 person, close-up

திமுகவிற்கு ஏன் ஆர்.கே நகரில் டெப்பாசிட் போனது: அரசியல் நிபுணர்கள் அலசல்

இதில் அலச என்ன இருக்கின்றது?

என்று எங்கள் தங்க தலைவியினை, குணவதி குஷ்புவினை இந்த திமுக அல்லக்கைகள் விரட்டியதோ, என்று அவர் வீட்டின் மேல் கல் எறியும் அளவு சென்றார்களோ அன்றே திமுக சரிவு ஆரம்பமாயிற்று

தலைவியின் மனதினை வேதனைபடுத்திய‌ யாரும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை.

தலைவியின் கண்ணீருக்கு பரிகாரம் செய்யாதவரை திமுக உருப்படாது.


காவல்துறையினை நினைத்தால் அசிங்கமாக உள்ளது : தினகரன் சீற்றம்

காவல்துறை என்ன செய்யும்? தன் கடமையினை செய்யும் அவ்வளவுதான்

காவல்துறையினை தாண்டி நினைத்தாலே அசிங்கம் என சொல்ல ஏராளமான விஷயங்களை தேர்தல் முடிவு கொடுத்திருக்கின்றது