டிரம்பின் இந்த அதிரடி பெரும் சலசலப்பினை ஏற்படுத்துகின்றது

Image may contain: 4 people, people sitting and indoor

இந்த ட்ரம்ப் என்பவர் சில இடங்களில் படு நேர்மையாகத்தான் இருக்கின்றார், முழுக்க நல்லவர் என சொல்லமுடியாவிட்டாலும் சில இடங்களில் மனிதரை பாராட்டியே தீரவேண்டும்

இந்த பாகிஸ்தான் எனும் நாடு இன்றுவரை நீடித்திருக்க அமெரிக்காவின் கடைக்கண் பார்வையே முக்கியம், இரண்டாம் போருக்கு பின்னரான உலகில் கம்யூனிசபூதம் எழும்பிய காலத்தில் ஆசியாவில் அவர்களின் முக்கிய கூட்டாளியாக பாகிஸ்தான் சேர்த்துகொள்ளபட்டது

அதனை வைத்து காஷ்மீர், ஆப்கன் , ஈரான் என எத்தனையோ பிரச்சினைகளில் மூக்கை நுழைத்து நான் நாட்டாமை என அமெரிக்கா காட்டிகொண்டே இருந்தது, இதற்கு கொட்டி கொடுத்தபணம் கொஞ்சமல்ல‌

பின் பாகிஸ்தான் அணுகுண்டு செய்து நிலமை எல்லை மீறி செல்லும்பொழுது அதை கைவிட சொல்லி கொடுத்த பணமும் கொஞ்சமல்ல‌

இந்தியாவின் ராணுவ சமநிலையினை சரியாக்கும் வண்ணம் பாகிஸ்தானுக்கு கொடுத்த ஆயுதமும் பணமும் ஏராளம்

பின்லேடன் பாகிஸ்தானிலே ஒளிந்திருந்தாலும் அவனை தேடுகின்றோம் என பாகிஸ்தான் நடித்து வாங்கியதும் கொஞ்சமல்ல‌

எத்தனையோ அமெரிக்க அதிபர்கள் வந்தாலும் பாகிஸ்தானை பகைக்கவில்லை, காரணம் ஆப்கனுக்கான சப்ளை பாகிஸ்தான் வழியே மட்டுமே செல்லும், கைபர் போலன் எல்லாம் அந்த எல்லையில் தான் உண்டு, பாகிஸ்தானின் அமெரிக்க ராணுவதளம் என ஏராள விஷயங்கள்

முதன் முதலாக ஒரு அமெரிக்க அதிபர் பாகிஸ்தானுக்கு நிதி கிடையாது அது தீவிரவாத நாடு என சொல்லி நிதியினை நிறுத்திவிட்டார் என்றால் அது டிரம்ப்தான்

பாகிஸ்தான் அரண்டு நிற்கின்றது, அந்த பெரும் தொகை இல்லை என்றால் பாகிஸ்தான் பட்ஜெட்டில் பெரும் துண்டு விழும், பள்ளமும் விழும் அப்படியே தீவிரவாதிகளையும் வளர்க்க முடியாது

ஆனால் ஆப்கனுக்கானில் இருக்கும் ராணுவத்திற்கான‌ அமெரிக்க சப்ளை, பாகிஸ்தானின் அமெரிக்க முகாம் எல்லாம் என்னாகும் என தகவல் இல்லை சொல்லமுடியாது ஆப்கனுக்கு வடக்கே இருக்கும் நாடுகளை அமெரிக்கா குறி வைக்கலாம்

டிரம்பின் இந்த அதிரடி பெரும் சலசலப்பினை ஏற்படுத்துகின்றது, மனிதர் மிக நியாயமான காரியத்தை செய்திருப்பதால் இந்தியனாக அவரை வாழ்த்தலாம்