தமிழக மக்களின் நாடிதுடிப்பினை உணர்ந்த ஒரே அரசியல்வாதி தினகரனே

ரஜினியினை ஆளாளுக்கு கரித்துகொட்டினாலும் தில்லாக வரவேற்பவர் தினகரன் ஒருவர்தான்

இவ்வளவிற்கும் ஒரு நடிகனின் வோட்டு இன்னொரு நடிகனுக்கு சென்றுவிட கூடாது என்ற‌ அச்சம் அவருக்குத்தான் வந்திருக்க வேண்டும், ஆனால் அசரவில்லை ஏன்?

தமிழக மக்களிடம் எப்படி வாக்குவாங்க வேண்டும் என்ற வித்தை அவருக்கு அத்துபடி, மக்களை நன்கு புரிந்தவர் அவர் ஒருவர்தான்

தமிழக மக்களின் நாடிதுடிப்பினை உணர்ந்த ஒரே அரசியல்வாதி தினகரனே

ரஜினி 5 பைசா செலவழிக்கமாட்டார் என தெரிந்தபின் தினகரனுக்கு என்ன சவாலை ரஜினி கொடுத்துவிட முடியும்?

அந்த தைரியம்தான் அவரை வரவேற்க வைக்கின்றது.

இன்னும் கேட்டால் என்ன சொல்வார் தெரியுமா?

ரஜினி என்ன? கமல் விஜய் என எல்லோரும் சேர்ந்துவந்தாலும் வரவேற்போம்