ஒரே நாளில் 50 லட்சம் உறுப்பினர்கள்: ரஜினிக்கு குவியும் ஆதரவு

கலைஞரை சந்தித்தார் அழகிரி, இன்று மாலை சந்திக்கின்றார் ரஜினி

சுறுசுறுப்பில் கலைஞர் தேனீ. தன் நாட்களில் ஒரு நிமிடம் கூட அவர் சும்மா இருந்ததே இல்லை. கட்சி, அரசியல், கூட்டம், எழுத்து, குடும்பம், வாய்ப்பு கிடைத்தால் பிராமண கலாய்ப்பு என படுபிசியாக இருந்தவர்

இப்பொழுது அவரால் முடியவில்லை, நாற்காலியில் அமர்ந்துவிட்டார் , பேசவோ எழுதவோ கூட முடிவதில்லை

ஆனாலும் உயிரோடு இருக்கும் வரை முடிந்தமட்டும் மக்களுக்கு ஏதாவது செய்தியாக சொல்லிகொண்டே இருப்பேன் முடியாவிட்டால் செய்தியாக வந்துகொண்டே இருப்பேன் என வந்து நிற்கும் கலைஞர் போல இன்னொரு அரசியல்வாதி வரப்போவதில்லை

அவதார அரசியல்வாதியான கலைஞர் ஒருவராலே அது சாத்தியம்


ஒரே நாளில் 50 லட்சம் உறுப்பினர்கள்: ரஜினிக்கு குவியும் ஆதரவால் அரசியல் கட்சிகள் அலறல் : செய்தி

ஒரே நாளில் 1.5 லட்சம் மிஸ்டு கால் என‌ மொத்தம் 1 கோடி மிஸ்டுகால்களை வாங்கிய கட்சியே ஆர்.கே நகரில் நோட்டாவிற்கு கீழே வாக்கு வாங்கியிருக்கின்றது

பில்ப்டப்பினை குறைத்துவிடுங்கள் அப்ரசண்டிகளா