உலகம் புரியாதவனாக இருக்கின்றான் தமிழன்…
சுதந்திரம் வாங்கி கொடுத்து முதலில் ஆண்ட காங்கிரஸ், திராவிட தமிழனை வாழ வைக்க வந்த திமுக, ஊழலில்லா ஆட்சி என வந்த அதிமுக
இது போக கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள்
சாதிவாரியாக தமிழனுக்கு உழைக்க ஏகபட்ட கட்சிகள், அது போக கடல்கடந்த தமிழனுக்காகவும் தொண்டை புடைக்க கத்தும் கட்சிகள்
மதவாரியாக, ஏரியா வாரியாக உழைக்க இன்னும் பல கட்சிகள் அமைப்புகள்
தேசிய கட்சியான பாஜக, இதுபோக நடிகர்கள் ஓடி வந்து நடத்தும் கட்சிகள் என இந்த தமிழனுக்கு சேவை செய்ய எத்தனை ஆயிரம் கட்சிகள் இருக்கின்றன
இப்படி கொடுத்து வைத்த இனம் உலகில் உண்டா?
அமெரிக்கனுக்கு பாவம் இரண்டே கட்சி, சீனனுக்கு ஒரே ஒரு கட்சி, ரஷ்யாவில் இரண்டு , பிரிட்டனில் இரண்டு. சில நாடுகளில் அரசர் என்ற ஒரே ஒருவரே
ஆனால் அந்த நாடுகள் எல்லாம் நன்றாக இருக்க, இத்தனை ஆயிரம் கட்சிகள் விழுந்து விழுந்து சேவை செய்யும் தமிழகம் மட்டும் ஏன் இப்படி இருக்கின்றது?
இத்தனை கட்சிகள் மக்கள் சேவையில் இருந்தும் தமிழன் ஏன் அழுதுகொண்டிருக்கின்றான்?
உலகிலே கொடுத்து வைத்த ஒரே இனம் தமிழினம் என்பது அவனுக்கு தெரியவில்லை? எந்த நாட்டில் கிடைக்கின்றது இத்தனை கட்சிகளின் சேவைகள்?
உலகம் புரியாதவனாக இருக்கின்றான் தமிழன்.