ரஜினி எம்ஜிஆரை போலவே மகா நல்லவர் : நடிகை லதா

Image may contain: 1 person, selfie and close-up

ரஜினி எம்ஜிஆரை போலவே மகா நல்லவர் : நடிகை லதா

இந்த அம்மணிக்கு ஒருகாலத்தில் அவர்பின்னால் சுற்றியவர்கள் எல்லாம் நல்லவர்கள் போல..

இந்த லதா என்பவர் ரஜினி அன்று ராமசந்திரனால் விரட்டபடும்பொழுது சத்தமே இல்லை

ரஜினி ஜெயாவினை எதிர்த்தபொழுதும் சத்தமில்லை

பின் எத்தனையோ ரஜினி சர்சை வந்தபொழுதும் லதாவிடம் இருந்தும் ஒரு பேச்சுமில்லை

லதா- ரஜினி- ராமசந்திரன்- கிண்டி ரோடு எல்லாம் 30 ஆண்டுகால சர்ச்சைகள்

அன்றெல்லாம் அமைதிகாத்த லதா இன்று ரஜினி இரண்டாம் ராமன், ரஜினி வாழும் கர்ணன் என்றெல்லாம் பட்டம் கொடுக்க கிளம்பிய காரணம் என்ன?

அவரை இயக்கும் சக்தி எது?

ரஜினி மேலான அந்த சர்ச்சையினை அவசர அவசரமாக துடைக்க லதாவினை யாரோ ஏவிவிடும் மர்மம் என்ன?

நடக்கும் விஷயங்கள் சாதாரணம் அல்ல, பின் இருந்து மிகுந்த நுட்பத்துடன் ரஜினியினை இயக்குகின்றார்கள்

இயக்கட்டும்

ரஜினி செய்திருக்க வேண்டியது இரண்டே விஷயம், அதுவன்றி எதுவும் சாத்தியமில்லை

ஒன்று தேசிய கட்சியில் தன்னை இணைத்திருக்க வேண்டும் அல்லது நடக்கும் காமெடி தர்பாருக்கு எதிராக திமுகவோடு கைகோர்த்திருக்க வேண்டும்

இரண்டும் அல்லாமல் அவர் வந்து நிற்பது முழு பலனை தராது, லதா என்ன? செத்துபோன ஜெயலலிதாவே வந்து ரஜினி மகா உத்தமர் என சொன்னாலும் தம்பிடிக்கு பிரயோஜனமில்லை

அடுத்து ரஜினிக்கு உத்தமர் சர்டிபிக்கேட் கொடுக்க போகும் சீனியர் நடிகை யார்? ஸ்றீதேவி அல்லது ஸீரிபிரியாவாக‌ இருக்கலாமோ?