நிர்மலா எங்கிருக்கின்றார் என தெரியவில்லை

Image may contain: 1 person

அம்மணி நிர்மலா, உங்களுக்காகத்தான் தமிழ்நாட்டு மேலவையினையே ராமசந்திரன் கலைத்து கடும் கலைச்சேவை செய்தாராம்

அந்த அளவு ஒரு காலத்தில் பிரபல அரசியல் செய்தியாக நீங்கள் இருந்திருக்கின்றீர்கள்

லதா வந்து ரஜினி நல்லவர் என சொல்லியாயிற்று, நீவிர் எங்கிருக்கின்றீர் என தெரியவில்லை. முட்டுவலியோ முதுகுவலியோ எது இருப்பினும் வலி பொறுத்து தமிழக விடியலுக்காக வந்து ரஜினி நல்லவர் என சொல்லிவிட்டு போவீர்கள் என தமிழகம் எதிர்பார்க்கின்றது

செத்துபோன ஜாணகி, மஞ்சுளா, ஜெயா தவிர ராமசந்திரன் படத்து நாயகிகள் எல்லாம் ரஜினிக்கு வாழ்த்து தெரிவிபார்கள் போல‌

எதற்கும் ராமசந்திரன் கல்லறையினை பாதுகாப்பது நல்லது, இது எப்படி அவருக்கு பொறுக்கும்?

கல்லறையினை உடைத்து அவர் வந்தாலும் வரலாம்