பிள்ளை என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்

காலையில் இட்லி சாப்பிட்டுகொண்டிருந்தால் அருகில் வந்த மகளுக்கு சட்னியினை பார்த்ததும் 
திடீர் ஞானம் வந்தது.

“ஏம்பா சட்னி ஊத்தி சாப்பிடுறீங்க, ஒரு அங்கிள் பீர் ஊத்தி சாப்பிடுவார்லா, அப்படி சாப்ட்டா நல்லா இருக்கும்ல..” என்றாள்.

பிள்ளை என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்

எல்லாம் டிவியில் சாமி படம் பார்த்த எபெக்ட்

“ராசாத்தி எனக்கு மட்டும் ஆசை இல்லையா இதனை அப்படியே உங்க அம்மா கிட்ட சொல்லும்மா..” என அனுப்பினால் இன்னும் பதில்வரவில்லை.

எப்படியோ சும்மாவே குஷ்பு படம் மட்டும் பார்க்கவா டிவி? என கேட்கும் வீடு அது, இனி அந்த டிவிக்கு 
சிக்கல்தான்