முகத்தை காட்டியே தீரவேண்டும் ….
இந்த Devi Somasundaram என்பவர் முகத்தை காட்டியே தீரவேண்டும் என பலர் அடம்பிடித்து கொண்டிருக்கின்றனர்.
அவர் முகத்தை காட்டாவிட்டால் விடவே மாட்டார்களாம், கடும் அட்டகாசம்..
போகிற போக்கை பார்த்தால் “அம்மா மேகலை, மணிமேகலை, வெளிய வாம்மா, பொத்தி வளர்த்தபுள்ள மேகல, அதனால வெட்கம் இன்னும் போகல” எனும் காமெடி காட்சி முகநூலில் அரங்கேறும் போல் தெரிகின்றது
(ஏம்மா Devi Somasundaram , அந்த வடிவேலு மணிமேகலை படத்தை போட்டுவிடு, அதன் பின் எந்த பய உன் முகத்தை தேடுவான் என பார்த்துவிடலாம் )
உலகின் மிகபெரிய எண் எது என கண்டுபிடித்துவிடலாம் போலிருக்கின்றது, ஆனால் சசிகலா குடும்பத்து ஆட்களின் எண்ணிக்கையினை கண்டுபிடிப்பது மகா சிரமம் போல
தினமும் ஒவ்வொரு பாத்திரம் நுழைகின்றது, செங்கிஸ்கான் வம்சத்தில் கூட இத்தனை பேர் இருக்க முடியாது
வாடகைக்கு பிடித்து வருவார்களோ?