வைரமுத்து தமிழ்பெண்ணான ஆண்டாளை பற்றி …
மிஸ்டர் வைரமுத்து தமிழ்பெண்ணான ஆண்டாளை பற்றி அமெரிக்க நூல் சொன்னதைத்தான் சொல்வீரா?
தமிழக இலக்கியம் சொன்னதை சொல்ல மாட்டீரா?
அதே அமெரிக்க ஆய்வாளர்கள் தமிழகத்தில் சிலரை பற்றி என்னவெல்லாமோ சொல்லியிருக்கின்றார்கள், திராவிட அரசியலுக்கு அமெரிக்க ஆதரவு உண்டு என்பதெல்லாம் பேசபட்டவை எழுதபட்டவை
அண்ணாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கிய ஏல் பல்கலைகழக சர்சை, சென்னை கோட்டையில் ஏல் பற்றிய கோப்பு காணாமல் போன சர்ச்சை என ஏராளம் உண்டு
திராவிடம் பேசும் தமிழரும் , ஈழத்தவரும் சேர்ந்து பெரும் சக்தியாக இலங்கையினை மிரட்டலாம் என முதலில் அகண்ட ஈழம் படம் போட்டு கொடுத்ததே அமெரிக்கா தான்
இப்படி ஏராளம் உண்டு
அவற்றை எல்லாம் விட்டுவிட்டு ஆண்டாள் பற்றி அமெரிக்கா என்ன சொன்னது என்ற ஆராய்ச்சியில் இறங்கியிருன்றீரா?
ஆண்டாளின் இலக்கிய தமிழ் எவ்வளவு அழகு? அதனை பற்றி ஏன் ஒருவார்த்தை சொல்லவில்லை? அதனையும் அமெரிக்கன் சொல்லி தரவேண்டுமா?
வைரமுத்து இப்பொழுது எல்லோரும் “வய்யிர” முத்து ஆகிவிட்டார்
மார்கழி மாதத்தில்தான் கிறிஸ்மஸ் பண்டிகையும் வந்தது, அதுபற்றி ஏக முரண்பாடுகளை வெள்ளையனே எழுதியிருக்கின்றான்
அதனை ஏனய்யா சொல்லவில்லை?