இஸ்ரோ தலைவராக தமிழர் சிவன்பிள்ளை நியமனம்
விண்வெளித்துறை செயலாளர் மற்றும் இஸ்ரோ தலைவராக தமிழர் சிவன்பிள்ளை நியமனம்.
கலாம், மயில்சாமி அண்ணாதுரை, ரவி அருணன் வரிசையில் இந்திய விண்வெளிதுறையில் சாதனை படைத்து மிக உயர்பதவிக்கு வரும் தமிழர் சிவன்பிள்ளையினை வாழ்த்துவோம்
இத்தேசத்தில் தமிழர்கள் புறக்கணிக்கபடுகின்றார்கள் என்றும், தமிழனுக்கு உயர்வே இல்லை அவன் அடிமை என சொல்பவர்கள் எல்லாம் எங்கே என தெரியவில்லை
இம்மாதிரி செய்திகளை வெளிநாட்டு ஊடகம் சொல்கின்ற அளவுக்கு தமிழ்நாட்டு ஊடகங்கள் சொல்லாது
அந்த பதவியின் பெருமை அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது, தமிழக பத்திரிகைகள் எல்லாம் குப்பை என்பதால் கண்டுகொள்ளவில்லை
இவரை போன்றவர்களை நிச்சயம் கொண்டாடவேண்டும், ஆனால் தமிழக பத்திரிகைகள் போலி அரசியல்வாதி, நடிகன் என போற்றிகொண்டே இருக்கும், பின் எப்படி தமிழகம் உருப்படும்?
இந்நாடை நேசித்து, அதற்காக நேர்வழியில் உழைக்கும் எல்லோரும் இந்தியரே, திறமை இருப்பின் அவர்களை இத்தேசம் உயர்ந்த இடத்தில் வைக்கும் என்பது இன்னொரு முறை நிரூபிக்கபட்டிருக்கின்றது
வாழ்த்துக்கள் மிஸ்டர் சிவன் பிள்ளை. இந்திய தமிழனாக உங்கள் பணி சிறக்க நெஞ்சார வாழ்த்துகின்றோம்