எப்படி சமாளிக்க போகின்றார் டிரம்ப்?

Image may contain: 2 people, people smiling, people standing

 

டிரம்பினை விரட்டியே தீருவதென்று சிலர் களமிரங்கி இருப்பது தெரிகின்றது, தேர்தலில் ரஷ்ய உதவி கோரினார் என்ற விவகாரம் ஓடிகொண்டிருக்கும்பொழுதே இப்பொழுது அடுத்த பரபரப்பு விஷயம் வருகின்றது

விஷயம் கிட்டதட்ட கிளிண்டன் மோனிகா லெவின்ஸ்கி போன்றது

(டிரம்ப் பெயர் இப்படி அடிபட, அந்த சந்தோஷத்தில் வடகொரிய அதிபர் ஒரு சுற்று பருத்துவிட்டாராம்)

அதாவது டிரம்ப் கிட்டதட்ட அந்தபுர விஷயங்களில் நெற்றிக்கண் ரஜினி போன்றவர் மன்மத லீலை கமலஹாசன் போன்றவர்

அப்படி ஒரு நடிகையுடன் முன்பு நெருக்கமாக இருந்ததாகவும், இப்பொழுது நடிகையின் வாயினை அடைக்க பெரும் பணம் கொடுத்ததாகவும் சர்ச்சைகள் வருகின்றன‌

விஷயம் பற்றி எரிகின்றது, டிரம்ப் இன்னும் வாய்திறக்கவிலை. டிரம்பிற்கு மிக சாதகமான விஷயம் அந்த நடிகை சன்னிலியோன் வகையறா என்பது

எப்படி சமாளிக்க போகின்றார் டிரம்ப்?

இதற்குத்தான் என்ன பெரிய வல்லரசானாலும் மக்காளாட்சி தத்துவத்தை தமிழகத்தில்தான் படித்தாக வேண்டும் என்பது.

“அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல, நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும் அல்ல..” என்ற ஆக சிறந்த தமிழக தத்துவத்தை எடுத்துவிட்டால் அடுத்த தேர்தலிலும் டிரம்ப் வெல்ல முடியாதா என்ன?