என்ன இருந்தாலும் கவிபேரரசர் அல்லவா?

Image may contain: 13 people, people smiling, people standing

சனிபெயர்ச்சி யாருக்கு போட்டு அடிக்கின்றதோ இல்லையோ வைரமுத்து என்பவருக்கு தலையில் குத்து டான்ஸ் ஆடுகின்றது

மோடி மிக சிறந்த பிரதமர் என சொல்ல தொடங்கியதில் இருந்து வெடித்த சர்ச்சை, ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவின் ஆதாரத்தையே அடித்து நொறுக்கி என்னவெல்லாம் செய்தது என்பதை உலகமே அறியும்

கவிப்பேரரசு என தன்னை தானே அழைத்துகொண்டாலும் ஆண்டாள் விவகாரத்தில் பேரரசர் திணறி விட்டார் என்பது நிஜம்

என்ன இருந்தாலும் கவிபேரரசர் அல்லவா? நெற்றியில் ஆண்டாள் பக்தர் அடித்த வடுவினை தடவிகொண்டே யோசித்தவருக்கு வியூகம் சிக்கிவிட்டது, உடனே படை திரட்ட கிளம்பிவிட்டார்

எப்படி திரட்டினார்? ஜீயரையும் மார்கழி புரட்சிபடையினையும் சமாளிக்க அட்டகாசமாக திராவிட, இஸ்லாமிய எழுத்தாளர்களை சாமார்த்தியமாக ஒரு மேடையில் தனக்காக அமர்த்தி தான் ஒரு போராளி போல காட்ட திட்டமிட்டிருக்கின்றார், கிறிஸ்தவ எழுத்தாளர் இல்லாததால் அதிலிருந்து யாருமில்லை

எப்படி அழைப்பது? ஆண்டாளுக்காக அடிக்கின்றார்கள் என்றால் யார் வருவர்?, அதனால் ஹாவர்டு தமிழ் இருக்கைக்கு 5 லட்சம் நிதி கொடுக்கும் விழா என அவர்களை அழைத்திருக்கின்றார்

கூர்ந்து பார்த்தால் ஆண்டாள் பக்தர்களுக்கு எதிராக அவர் கூட்டணி அமைப்பது புரியாமல் போகாது

முதலில் வடுகபட்டி பின் சென்னை அதன் பின் ஈழம் பின் உலகநாடுகளில் எல்லாம் தமிழ் வளர்த்தை வைரமுத்துவிற்கு ஹவர்டு பல்கலைகழகத்திலும் தமிழ்வளர்க்கும் ஆர்வம் ஆண்டாள் புண்ணியத்தில் வந்திருக்கின்றது

அவரின் ஹாவர்டு தமிழ் இருக்கை ஆசையின் விலை ஐந்து லட்ச ரூபாய் என சொல்லிகொண்டு நிதிவழங்கும் மேடைக்கும் வந்து கொடுத்தும் விட்டார், அத்தோடு அவர் விட்டாலும் அவர் தலையில் இருந்த சனி விடவில்லை

மேடையில் சுவாரஸ்யமாக பேசுகின்றேன் என பேசி மனுஷ்யபுத்திரனை நோக்கி நீவீர் இந்நூற்றாண்டின் மிகபெரும் சிந்தனையாளர், அறிவாளி, உங்கள் சிந்தனை கண்டு நான் வியந்தேன் என அள்ளி விட்டிருக்கின்றார்

இதற்கு நேராக இஸ்லாமிய பெருமக்களே இந்துக்கள் என்னை அடிக்கவருகின்றார்கள் என வாய்விட்டு கேட்டிருக்கலாம், ஆனால் இலக்கியவாதி அல்லவா இப்படித்தான் மறைமுகமாக வருவார்

எதுவுமே புரியா மனுஷ்யபுத்திரனுக்கு இதுவா புரியும்? அவரோ கலைஞருக்கு அடுத்து வைரமுத்து புகழ்ந்தது என்னைத்தான் என் ஸ்பீக்கரோடு அலைகின்றார்

வைரமுத்து இப்போது இருக்கும் நிலைக்கு மனுஷ்யபுத்திரன் என்ன? அல்கய்தா, அல் உமா என யாரையும் சிந்தனையாளர் என ஏற்றுகொள்ள தயார்

இப்படியாக ஆண்டாள் குழப்பத்திலிருந்து தப்பிக்க இஸ்லாமிய சார்பெடுத்து , திராவிட சாயல் பூசி பெரும் காமெடி நடத்துகின்றார் வைரமுத்து

உண்மையில் வைரமுத்து என்ன செய்திருக்கலாம்? இந்த மனுஷ்யபுத்திரனிடம் உன் சிந்தனையினை கண்டு வியக்கின்றேன் என சிரிப்பினை அடக்கிவிட்டு சொல்லியிருப்பதை விட, நேரே கமலாலயம் 
சென்றிருக்கலாம்

அங்கு வீற்றிருக்கும் தமிழிசை, எச்.ராசா போன்றோரிடம் எப்படி இப்படி தூள் பறத்துகின்றீர்கள்? நீங்கள் பேசியபின் யோசிப்பீர்களா? இல்லை யோசித்து பேசுவீர்களா? மொத்தத்தில் கொஞ்சமாவது யோசிப்பீர்களா என கேட்டால் மொத்த தமிழகமும் வைரமுத்துவினை கைதட்டி வரவேற்காதா?

இதனை விட்டு மனுஷ் இந்த நூற்றாண்டின் மிகபெரும் சிந்தனையாளர் என சொல்லி திரிகின்றார் வைரமுத்து

அடுத்து இந்த ஆயிரம் ஆண்டின் மிகபெரும் சிந்தனையாளர் திராவிட அல்லது முக ஸ்டாலின் அடிவருடியாக இருக்கலாம், அநேகமாக அது வைரமுத்துவினால் உதயநிதி ஸ்டாலின் என அடையாளம் காட்ட்படலாம்

விரைவில் அதனை தமிழகம் காணும், நாமும் பார்த்து தொலைக்க வேண்டும்