பிரமாண்ட அணிவகுப்பு ஆரம்பிக்கட்டும் : டிரம்ப்

தேசிய விழா அன்று மிக பிரமாண்ட ராணுவ அணிவகுப்பினை காட்டி மிரட்டியது சீனா

ஏதும் விழா என்றால் தன் ராணுவ அணிவகுப்பை காட்டி அரேபிய பகுதியில் தானும் தாதா என காட்டிகொள்வது ஈரானிய பாணி

தென்கொரியாவிற்கு விளையாட்டு வீரர்களை ஒரு பக்கம் அனுப்பிவிட்டு மறுபக்கம் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்தி சண்டைக்கும் தயார், சமாதானத்திற்கும் தயார் என்கின்றது வடகொரியா

டிரம்ப் பிரான்ஸ் சென்ற பொழுது பிரான்ஸும் அப்படி நடத்திகாட்டி வெறுப்பேற்றியது.

இதனை எல்லாம் பார்த்த டிரம்பிற்கு அழுகையும் விம்மலும் பொத்துகொண்டு வந்துவிட்டது

மாபெரும் வல்லரசான அமெரிக்கா சும்மா இருக்கலாமா ம்ம் பிரமாண்ட அணிவகுப்பு ஆரம்பிக்கட்டும் என உத்தரவிட்டுவிட்டார்

அய்யா அவர்கள் சிறு பிள்ளைகள் அவர்கள் கம்பு சுற்றினால் உலகில் சிக்கல் இல்லை. ஆனால் நாம் அப்படி அணிவகுப்பு நடத்தினால் ரஷ்யா நடத்தும் இன்னும் சில நாடுகள் நடத்தும் இது தேவையில்லா சிக்கலை ஏற்படுத்தும் என ஆலோசகர்கள் சொன்னால் டிரம்ப் கேட்கவே இல்லை

விரைவில் அமெரிக்க ராணுவ அணிவகுப்பு நடக்கலாம் என்கின்றார்கள், தொடர்ந்து ரஷ்யா நடத்தலாம் அதனை தொடர்ந்து உலகெல்லாம் அணிவகுப்புகள் நடக்கும் என்கின்றன செய்திகள்

அமெரிக்க வலிமை யாருக்கு தெரியாது, ஏன் வீணாக இந்த நபர் அடம்பிடிக்கின்றார் என தலையில் அடித்துகொள்கின்றனர் அமெரிக்க தளபதிகள்.