ஹார்லி டேவிட்சன் போன்ற பைக்குகளுக்கு இருக்கும் மதிப்பே தனி
என்னதான் என்பீல்டு புல்லட், ஹீரோ ஹோண்டா , பஜாஜ் என பல பைக்குகள் இந்தியாவில் தயாரிக்கபட்டாலும் , பணக்காரர்கள் இறக்குமதி செய்யும் ஹார்லி டேவிட்சன் போன்ற பைக்குகளுக்கு இருக்கும் மதிப்பே தனி
இவை எல்லாம் வெளிநாட்டுதயாரிப்புகள் அவற்றிற்கான சந்தை இந்திய பெரும் பணக்காரர்களுக்கானது, இதில் என்ன சிக்கல் என்றால் இந்திய அரசு இறக்குமதி வரியினை 70% வரை வைத்திருக்கின்றது
வெளிநாட்டிலிருந்து பைக் வாங்க வசதி இருக்கின்றதல்லவா? கட்டு வரியினை என கேட்பது இந்திய நிலைப்பாடு, இதில் குறிப்பிட்ட வரியினை சம்ப்ந்தப்ட்ட நாடும் கட்ட வேண்டும்
இதில் இப்பொழுது டிரம்புக்கு அதிக வருத்தமாம், “எங்கள் நாட்டு பைக்கினை விற்க அவர்களுக்கு வரி கட்ட வேண்டி இருக்கின்றது, அது இந்தியா என நான் சொல்லமாட்டேன்” என அண்ணா பாணியில் பேசியிருக்கின்றார்
விஷயம் என்னவென்றால் இந்தியபொருட்களை விற்க அங்கு வரி இல்லையாம், இந்தியாவிடமிருந்து எந்த வரியும் அவர்கள் வசூலிக்கவில்லையாம்
இதனையும் சேர்த்து டிரம்ப் சொல்வதுதான் ஆபத்து
ஆக அமெரிக்காவில் விற்கபடும் இந்திய பொருட்களின் விலை கணிசமாக உயரலாம் அல்லது அங்கு பணியாற்றும் இந்தியர்களின் பர்சுகள் ரகசியமாக உருவபடலாம் என ஒரு பரபரப்பு தொற்றியிருக்கின்றது