எம்.ஜி ராமசந்திரனின் நடிப்புலக வாரிசு மிர்ஸி சிவா
1980களில் வந்த சர்ச்சை அது, ராமசந்திரனுக்கு வாரிசு நடிகர் பட்டத்திற்கு பொருந்துவது யார்? எனும் சர்ச்சை அது
பட அதிபர்களுக்கும் , மக்களுக்கும் ராமசந்திரனின் சூப்பர் ஸ்டார் ஹீரோ இமேஜ் பொருந்துவது ரஜினிக்கு என தெரிந்தாலும் ராமசந்திரன் ஒப்புகொள்ளவே இல்லை, மாறாக ரஜினியினை ஒரு கண்காணிப்பிலே வைத்திருந்தார்
திடீரென பாக்யராஜ் என் கலையுலக வாரிசு என்றார் ராமசந்திரன் . . கதை இயக்கம், சென்டிமென்ட் என செல்லும் பாக்யராஜின் டிராக் வேறு என கொண்டாடும் தமிழகம் வாய்விட்டு சிரித்துவிட்டு “போங்க வாத்தியாரே..” என்றது
ராமராஜன் முடிந்த அளவு பார்த்துவிட்டு ராமசந்திரனின் வாரிசு எனும் அடையாளத்தை பெற முடியாமல் சென்றார்
ஆனால் இப்பொழுது ஒரு அட்டகாசமான நடிகர் வந்திருக்கின்றார், 100% நடனம், வாயசைப்பு, கெத்து என எல்லாவற்றிலும் ராமசந்திரனை அபப்டியே நிறுத்துகின்றார்
நிச்சயம் இந்த ராமசந்திரனின் நூற்றாண்டு விழா நிறைவில் ராமசந்திரன் நடிப்பினை இவரில் காணலாம் என அவருக்கு விருது கொடுக்க வேண்டும்
வளர்மதிக்கு பெரியார் விருது கொடுத்தது போல் இல்லாமல் இது அர்த்தமுள்ள விருதாக அமையும்
எம்.ஜி ராமசந்திரனின் நடிப்புலக வாரிசு என சங்கமும் , தமிழகமும் ஒப்புகொண்டிருக்கும் நடிகர் யார்?
“மிர்ஸி சிவா”
சந்தேகமின்றி சொல்லலாம் ராமசந்திரனின் எல்லா வகை நடிப்பும் அவருக்கு அட்டகாசமாக வருகின்றது, இன்றைய நிலையில் ராமசந்திரன் நடிப்பினை நினைவுபடுத்தும் நடிகர் அவர் ஒருவரே தான்
மிக கஷ்டபட்டு கணித்து சொல்லியாயிற்று இனி அவருக்கான கவுரவத்தை கொடுக்க வேண்டியவர்கள் கொடுக்கட்டும்