மோடியின் ஆலோசனைபடியே அணிகளை இணைத்தோம் : பன்னீர்
மோடியின் ஆலோசனைபடியே அணிகளை இணைத்தோம் : பன்னீர் செல்வம் பேட்டி
ஆக நாட்டுக்கு சேவை ஆற்ற வேண்டிய பிரதமர், அதிமுகவினருக்கு தரகு வேலை பார்த்திருக்கின்றார்
என்ன இது மோடிக்கு வந்த சோதனை?
சும்மாவே ஆஸ்திரேலியா, அமெரிக்கா, அரேபியா எல்லாம் அதானி, அம்பானி தொழில்கள் விரிவடைய இவர் தரகு வேலை பார்க்கின்றார் என்ற சர்ச்சை வரிந்துகட்டி வரும் நிலையில் அதிமுக அணிக்குமா தரகு வேலை பார்த்திருக்கின்றார்.
மிஸ்டர் மோடி, பாரத பிரதமர் செய்யும் வேலையா இது?
அவர்கள் என்ன காமராஜரும் ராஜாஜியுமா? இல்லை அண்ணாவும் சம்பத்துமா?
அதுவல்லாமல் அவர்கள் வந்து உங்களையும் அத்வாணியினையும் இணைத்து வைக்க போகின்றார்களா
என்னமோ மிஸ்டர் மோடி, தமிழகம் நன்றாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது போல..