அமெரிக்காவில் சிகிச்சை பெறுகின்றார் விஷால்

அமெரிக்காவில் சிகிச்சை பெறுகின்றார் விஷால்

மனிதர் மீது ராதாரவி 7 கோடி ரூபாய் மோசடி புகாரை இருநாட்களுக்கு முன்புதான் வாசித்தார், பொதுவாக தமிழக அரசியல்வாதிகள் நெஞ்சை பிடித்துகொண்டு இங்குதான் மருத்துவமனைக்கு ஓடுவார்கள், இவர் அமெரிக்காவிற்கே ஓடியிருக்கின்றார்

என்ன நடந்திருக்கும்? ஆர்.கே நகரில் அரசியலில் இறங்க சொல்லி மிரட்டியது போல கட்சி தொடங்க‌ யாரும் மிரட்டியிருப்பார்களோ?

இந்த விஷாலை எப்படி வர வைக்கலாம்?

“இந்த தமிழ்சினிமா சென்டிமென்ட் படி அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்ற கலை உலகினர் யாரும் நெடுநாள் வாழவில்லை. அண்ணா, ராமசந்திரன், கண்ணதாசன் முரசொலிமாறன், பத்மினி என பல சென்டிமென்ட் உண்டு” என அவர் காதில் ரகசியமாக முணுமுணுத்தால் மனிதர் அதன் பின் அங்கு இருப்பார்?