அமெரிக்க இனபாகுபாடு கொடுத்த கொடூர சிகிச்சை அது ….
ஸ்ரீதேவி நிறைய சர்ஜரி செய்தார், நிறைய ஆப்பரேஷன் செய்தார் அதுதான் அவர் உடல்நிலை கெட காரணம் என பலர் கிளம்பியாயிற்று
அதில் உண்மையும் இருக்கலாம், எக்காலமும் ஒரே அழகுடன் இருக்க அவர் என்ன குஷ்புவா?
ஸ்ரீதேவி இப்படித்தான் , மைக்கேல் ஜாக்சனும் இப்படித்தான் என பலர் சொல்கின்றார்கள்
ஸ்ரீதேவி தன்னை நடிப்பில் நிரூபித்துவிட்டு, உச்ச இடம் சென்றுவிட்டு தன் அழகினை காக்க போராடி இருக்கலாம்
ஆனால் மைக்கேல் ஜாக்சன் நிலைவேறு, கருப்பன் என்பதற்காக அவன்பட்ட அவமானம் கொஞ்சமல்ல, உடலை மறைத்த அவனால் முகத்தை மறைக்கமுடியவில்லை. ஓரளவேனும் முகம் வெள்ளையாக தெரிந்தால் தவிர தனக்கு அங்கீகாரம் கிடைக்காது என ஏங்கினான்
அமெரிக்க இனகொடுமை அப்படி இருந்தது
அந்த கொடுமையே அவன் முகத்தை அவன் அடிக்கடி உரித்து கொஞ்சமேனும் வெள்ளையாக முயற்சித்தான். அவன் நடனமும் இசையும் அற்புதமாக இருந்தும், அங்கீகரிக்க வேண்டிய சமூகம் நோக்கியது அவன் நிறத்தைத்தான்
அவன் அதனை செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு வந்தான். அவன் முகம் மாற தொடங்கியபின்புதான் அவனுக்கான அங்கீகாரம் கிடைத்தது. அதை தக்க வைக்க தொடர்ந்து முகத்தை ஏதோ செய்துகொண்டிருந்தான்
கிட்டதட்ட 24 முறை முக சர்ஜரி செய்ததாக அவன் வாழ்வு சொல்கின்றது
ஸ்ரீதேவியின் சிகிச்சைகள் அவர் அழகை தக்க வைக்க நடந்திருக்கலாம், ஆனால் ஜாக்சனின் சிகிச்சை அவன் ஏற்றுகொண்டு செய்ததல்ல அமெரிக்க இனபாகுபாடு கொடுத்த கொடூர சிகிச்சை அது.