பிப்ரவரி 2018 ……

உலகம் மகா பரபரபாயிற்று டிரம்ப் எப்பொழுது பிப்ரவரி 28ம் தேதி ஆகும் என காத்துகொண்டிருக்கின்றார். புட்டீன் அணு ஆயுத பட்டனில் கைவைத்துகொண்டிருக்கின்றார்

பிரிட்டனும் , பிரான்சும் கடும் ஆலோசனையில் உள்ளது, சீனாவின் ஜின்பெங் ஆலோசனை குழுவினை கூட்டியுள்ளார். வடகொரிய அதிபர் கூட ராக்கெட் சோதனையினை நிறுத்த உத்தவிட்டாயிற்று

மகிந்த ராஜபக்சே முதல் நவாஸ் ஷெரிப் வரை எல்லோரும் அவரின் அந்த மகா முக்கிய முடிவினை நோக்கியே பார்த்துகொண்டிருக்கின்றார்கள், சிரியாவில் கூட சண்டை போடும் எல்லோருக்கும் மகா ஆர்வம் அந்த மனிதர் சொல்ல போகும் முடிவு பற்றி

ஆம், டி.ஆர் ராஜேந்தரின் முடிவிற்காக உலகம் மகா ஆர்வமாக , கண் இமைக்காமல் காத்துகொண்டிருக்கின்றது