கனிமொழிக்கு அது உற்சாகம் ஆகிவிடாதா?

மகராஷ்டிராவில் மாதம் 12 லட்சம் வருமானம் ஈட்டிய டீக்கடைகாரர் : பரபரப்பு செய்தி

இதென்ன பிரமாதம்? தமிழக முன்னாள் டீக்கடைகாரர் முன்பு முதல்வராக இருந்து இன்று துணைமுதல்வராகி பல்லாயிரம் கோடி சம்பாதித்தாயிற்று

குஜராத் டீக்கடைக்காரர் ஒருவர் பிரதமராகி சிலர் பில்லியன் கோடி டாலரில் புரள வழிசெய்தாயிற்று

இதில் ஒரு டீக்கடைக்காரர் மாதம் வெறும் 12 லட்சம் சம்பாதிக்கின்றாராம், இது ஒரு செய்தியாம்

 


பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து மோடி அரசு பேசாதது ஏன்? : பெண்கள் தின விழாவில் ஸ்டாலின் கேள்வி

தமிழகம் எனும் மிகபெரிய மாநிலத்தின் பாஜக தலைவியாக தமிழிசை எனும் பெண்ணை நியமித்ததிலே பாஜகவின் பெண்களுக்கான ஒதுக்கீடு தெரியவில்லையா?

தமிழக திமுகவில் எத்தனை பெண் மாவட்ட செயலாளர்கள் உண்டு?

முதலில் திமுக கட்சியில் பெண்களுக்கான இடஒதுக்கீடு முறையாக உண்டா என தமிழிசை கேட்டால் என்ன ஆகும் மிஸ்டர் ஸ்டாலின்?

கனிமொழிக்கு அது உற்சாகம் ஆகிவிடாதா?