தமிழ் திரையுலகில் ஏதோ ஸ்ட்ரைக் தொடங்கிவிட்டார்களாம்…

தமிழ் திரையுலகில் ஏதோ ஸ்ட்ரைக் தொடங்கிவிட்டார்களாம், இதனால் புதுபடங்கள் ஏதும் தியேட்டருக்கு வராதாம்
இதனால் கொஞ்ச நாளைக்கு இந்த திரைவிமர்சனம், புதுபட வெளியீடு போன்ற இம்சைகள் எல்லாம் இருக்காது
அதாவது தியேட்டர்காரர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டையாம், இருவருக்குமே கட்டுபடி ஆகவில்லை என தகறாறாம்
உண்மையில் படதயாரிப்பின் பெரும் செலவு நடிகர்களுக்கான சம்பளம், அதில் கை வைத்தால் ஒரு சிக்கலும் வராது, இப்போதைக்கு இது சாத்தியமில்லை என்பதால் இருவரும் முட்டிகொண்டு புதுபடங்கள் வராமல் போயிற்று
ஆனால் தியேட்டரில் படம்பார்ப்பதை அன்றாட, வாராந்திர கடமையாக வைத்திருக்கும் தமிழர்கள் கதறுகின்றார்களாம் , இதனால் அவர்கள் பாதிப்பினை சரி செய்ய தியேட்டர்கள் பழைய படங்களையே ரிலீஸ் செய்கின்றதாம்
சில தியேட்டர்கள் இதுதான் நேரம் என ஸ்ரீதேவி படங்களை வெளியிடுகின்றதாம்,
இடைவெளியினை நிரப்ப பல தியேட்டர்கள் முன்பு வந்த வெற்றிபடங்களை வரிசையாக வெளியிடுகின்றன என்கின்றார்கள்.
இந்த தியேட்டர்காரர்களுக்கு சங்கம் சொல்லிகொள்வது ஒன்றுதான்
தியேட்டர்களில் கூட்டம் அலைமோத எங்கள் தங்க தலைவி குஷ்புவின் மிக சிறந்த படங்களை திரையிடுங்கள், குறைந்தபடம் 6 மாதம் ஹவுஸ்புல்லாக ஓடும் என சங்கம் உத்திரவாதம் கொடுக்கின்றது