மாணவர்கள் அரசியலுக்கு வர கூடாது : ரஜினி
மாணவர்கள் அரசியலுக்கு வர கூடாது : ரஜினி
ஹிஹிஹிஹி அவங்க தியேட்டருக்கு மட்டும் வந்து விசிலடிக்கலாம், இல்லீங்களா எசமான்?
சினிமாவில் குழந்தை நட்சதிரமாக, சின்னதிரையில் நடிகர்களாக
ஏன் டிவி நிகழ்ச்சியில் ஆட்டம், பாடல், குத்தாட்டம் என ஒரு மாதிரி நிகழ்வுகளில் பங்கேற்று மாணவ சமுதாயமே திசைமாறுகின்றது.
படிக்கும் மாணவர்கள் மனதிலே சினிமா மோகமும், நடிக்கும் ஆடும் ஆர்வமும் பதியவைக்கபடுகின்றது
அதனை எல்லாம் ரஜினி கண்டிக்கமாட்டாராம்.
ஆனால் படிக்கும் மாணவர்கள் அரசியலை கவனித்தால் தவறாம்
ஒருவேளை நடித்து , போரடித்து 70வயதில் அவர்கள் அரசியலுக்கு வந்தால் போதும் என சொல்கின்றாரோ?
மாணவ பருவத்திலே அவனுக்கு அரசியல் ஞானமும், அதன் உள்மோசடிகளும் தெரிந்தால் இவர் போல நடிகர்களுக்கு எப்படி ரசிகர்கள் உருவாகியிருப்பார்கள்? இவர் எப்படி கட்சி தொடங்கமுடியும்?
மனிதர் அதில் எச்சரிக்கையாகத்தான் இருக்கின்றார்.