பிரம்மோஸ் ரஷ்ய தயாரிப்பு என சொல்லிவிட்டோமாம்….

ஒரு சில அறிவாளிகள் நம்மை மடக்கிவிட்டார்களாம், எப்படி என்றால் இப்படித்தானாம்

பிரம்மோஸ் இந்தியாவின் ஆகபெரிய பலம், அப்துல்கலாம் அதில் பணியாற்றினார் என சொல்லி இருந்தோமாம்

இப்பொழுது பிரம்மோஸ் ரஷ்ய தயாரிப்பு என சொல்லிவிட்டோமாம்

அதனால் ஆங்காங்க கலாய்கின்றார்களாம்

இந்தியாவின் பிரம்மபுத்திரா நதி சீனாவிலும் ஓடும், இருவருக்கும் முதல் சர்ச்சை அந்த நதியில்தான் வந்தது

மாஸ்கோ நதி ரஷ்யாவினுடையது, மாஸ்கோ நகரம் அதன் அருகேதான் அமைந்துள்ளது

இந்த அதிவேக ஏவுகனையினை ரஷ்யாவின் சூப்பர்சானிக் ரக மாடலின் கூட்டாக இந்தியாவும் ரஷ்யாவும் தயாரித்தன, அதன் அடிப்படை தொழில்நுட்பம் ரஷ்யாவினுடையது

கலாமின் இந்தியா பல ஆலோசனைகளை வழங்கி அதனை மேம்படுத்தி பிரம்மபுத்திரா மாஸ்கோ என்பதை சுருக்கி பிரம்மோஸ் என பெயரிட்டது, அது சீனாவின் தூக்கத்தை கெடுக்கும் ஏவுகனை என்பதில் சந்தேகமில்லை

கலாமின் உழைப்பை சொல்லும்பொழுது பிரம்மோஸ் கனையும் வரும், அதே நேரம் ரஷ்ய உதவி பற்றி சொல்லும்பொழுதும் அந்த கனை வரும்

இதை பற்றி சொன்னால் ஸ்டான்லி ராஜன் குழப்பவாதி என சிலர் ஊளையிட்டு கொண்டிருக்கின்றார்களாம்