சிலை இடிப்புக்கு பிரதமர் கண்டனம்…
நாடு முழுக்க சிலை இடிக்க கிளம்பி இருப்பவர்களை பிரதமர் மோடி கண்டித்திருப்பது வாழ்த்துகுரியது
ஆனால் அதற்கு காரணமானவர்களை கட்சியினை விட்டு கொஞ்ச காலமாவது நீக்கி தண்டிக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது
லெனின் , பெரியார், அம்பேத்கர் என நாடு முழுக்க சமத்துவம் பேசியவர் சிலையினை தகர்க்க ஒரு கும்பல் கிளம்பி அழிச்சாட்டியம் செய்கின்றது
இதனை பிரதமரே கண்டித்திருக்கின்றார், ஆனால் செய்தவர்கள் , தூண்டியவர்கள் அவர்கள் கட்சிக்காரர்கள் என்பதை மறக்கின்றார்
பிரதமராக மோடியின் அறிவிப்புக்கு வாழ்த்துக்கள், ஆனால் கட்சி தலைவராக என்ன நடவடிக்கை எடுத்தார்?
இதனால் மோடி மீதான நம்பகதன்மை குறைகின்றது, இந்த எச்.ராசா என்பவரை கொஞ்சகாலமாவது கட்சியினை விட்டு தூக்கி எறியட்டும் அதன் பின் நம்பலாம்
தமிழகத்தில் பாஜக பெயருக்காவது இருக்க இதனை அவர் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் இருப்பதும் நிச்சயம் காலி