6 பெண்களுடன், 121 இந்தியர்களுக்கு உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்

6 பெண்களுடன், 121 இந்தியர்களுக்கு உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் : செய்தி

அதாவது போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 121 இந்தியர் இடம்பிடித்துள்ளனர்

ஜிண்டால், அம்பானி, விப்ரோ பிரேம்ஜி முதல் எச்.சி.எல் ஷிவ்நாடார் வரை பலர் இருக்கின்றனர், பதஞ்சலி குழுமமும் வந்திருக்கின்றது

இதில் ஜிண்டால் குடும்ப பெண்கள் போன்றவர்களுடன் 6 பெண்களும் இருக்கின்றார்கள்.

நானும் பலமுறை வாசித்தேன், ஒவ்வொரு வார்த்தையாக வாசித்தேன். தலைகீழாக நின்று வாசித்தும் கனிமொழி பெயரும் இல்லை, கலைஞர் பெயரும் இல்லை

அட, கலைஞர் ஊழல் செய்து உலக பணக்காரர் ஆனதாக சொன்னார்களே, ஸ்பெக்ட்ரமில் மட்டும் 10 அம்பானியினை மொத்தமாக வாங்கும் அளவு சுருட்டினார் என்றேல்லாம் எழுதினார்களே? என்றெல்லாம் பார்த்தால் அவர்கள் பெயர் வரவே இல்லை

ஒருவேளை இந்த ஜிண்டால், லஷ்மி மிட்டல் எல்லாம் திமுக பினாமிகளோ என்றால் அதுவுமில்லை

இந்திய அளவில் கூட , ஏன் தென்னிந்திய அளவில் கூட‌ கலைஞர் குடும்பம் வராது, ஆனால் அவர் ஊழல் செய்து உலக பணக்காரர் ஆனார் என ஒரே ஒப்பாரி

ஆதாரம் கேட்டால் தெரியாது, இதோ போர்ப்ஸ் பத்திரிகையில் கூட உலக பணக்காரர் வரிசையில் ஒரு திமுகவினர் இல்லை

ஆனால் அம்பானியும், பதஞ்சலியும் இருக்கின்றது

இப்பொழுதும் கேளுங்கள் கலைஞர் ஊழல் செய்து தன் குடும்பத்தை உலக பணக்காரர் ஆக்கினார் என சொன்னதையே சொல்வார்கள்

இவர்கள் போர்ப்ஸ் பத்திரிகை அலுவலகம் முன் சென்று ஏன் கலைஞர், கனிமொழி பெயரை எல்லாம் போடவில்லை என கேட்டால்தான் என்ன?