தாஜ்மகால் வரிசையில் தலைவி

Image may contain: one or more people and outdoor

நிலாவினை எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் அழகு, தாஜ்மஹாலை எந்த கோணத்தில் நோக்கினாலும் அழகு

அந்த நிலா, தாஜ்மகால் வரிசையில் தலைவி

தோகை விரித்த மயிலாக அவர் நிற்கும் அழகு கண் கொள்ளா காட்சி.

மயில் தோகை விரித்தால் மழை வரவேண்டும் அல்லவா?

வங்ககடலில் புயல் ஏன் உருவானது என இப்பொழுது புரிகின்றதா? இயற்கையினையே தன் கட்டுபாட்டில் இயங்க வைப்பவர் எங்கள் தலைவி.

“தேவதை கூந்தல் கருநிற நாகம், 
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்”

(அடேய் Babu Rao , நயன் எல்லாம் இந்த கூந்தல் அழகுக்கு கூட தேறமாட்டார்)


தமிழகம் முழுக்க மழை பெய்கின்றது : செய்தி

ஏராளமானோர் இந்த நேரத்தில் என்ன மழை? இது மகா ஆச்சரியம் என சொல்லுகின்றார்கள்

மயில் தோகை விரித்தால் மழை வரத்தானே வேண்டும்.

தலைவி கூந்தல் விரித்த அழகினை கண்டு மயில் ஆடுகின்றது என உணர்ந்த மேகம் மழையாய் கொட்டுகின்றது

இதில் என்ன ஆச்சரியம்? இந்த மயிலை கண்டு மழை வராவிட்டால்தான் ஆச்சரியம்

தலைவியின் அருமை வானத்து மேகங்களுக்கு தெரிந்தவரை இங்கிருப்பவர்களுக்கு தெரியவில்லை

இனியாவது தெரிந்துகொள்ளட்டும்