எங்க வீட்டு மாப்பிள்ளை

Image may contain: 1 person, food

எது எதெல்லாமோ ஈவ் டீசிங் வகையில் வருமாம், பெண் மனதை நோகடிப்பது, பெண்ணை அசிங்கபடுத்துவது, பொது இடத்தில் ஒரு மாதிரி பார்ப்பது எல்லாம் ஈவ் டீசிங்காம்

ஆனால் கிட்டதட்ட 50 ஆயிரம் பெண்களை ” சீ …போ..” என கடந்துவிட்டு 1 பெண்ணை ஆர்யா மணம் முடிப்பாராம்

இப்படி ஏராளமான பெண்களை அவர் “ச்சீ போ..” ரிஜெக்டட் என கோடிமக்கள் பார்த்திருக்க டிவியில் சொல்வாராம். அப்பெண்கள் அவமனமாய் வெளியேறுவார்களாம்

இது அப்பெண்ணின் மனதில் எவ்வளவு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும், பிற்காலத்தில் அவள் வாழ்வினை எத்தனை சிக்கலை கொண்டுவரும் என்றெல்லாம் யாரும் எண்ணுவதில்லை

ஏதோ அறநிலைய துறை வேலைக்கு இன்டர்வியூ நடப்பது போல் நடக்கும் நிகழ்ச்சி நிச்சயம் பெண்களுக்கு வெறுப்பினை ஊட்டியிருக்கும், ஆனால் சத்தமில்லை

ஏதோ ஆரியா என்பவர் இந்திரலோகத்தில் இருந்து வந்தது போலவும், மானிட பெண்களை எல்லாம் அவர் வரிசையில் நின்று பார்ப்பது போலவும் காட்சிகள்

பெண்ணுரிமையினை காலில் போட்டு மிதிக்கும் , பெண்களை இழிவுபடுத்தும் விஷயம் இது.

இது குற்றமே இல்லையாம், இதெல்லாம் பெண்ணை அவமானபடுத்துதல் எனும் பிரிவில் வராதாம், காரணம் இது சுயம்வரமாம்.

நிச்சயம் ஈவ் டீசிங் பிரிவில் ஆர்யாவினையும் இந்த டிவி நிகழ்ச்சியாளர்களையும் உள்ளே தள்ள வேண்டும். ஆனால் செய்யவில்லை

என்ன சமூகமோ? என்ன சட்டமோ? ஒரு மண்ணாங்கட்டியும் புரியவில்லை