டஜன் திராவிட கழகங்கள் இருக்கின்றன
பெரியார் நாத்திகர் அதனால் எந்த நேரத்தில் திராவிடர் கழகம் என தன் இயக்கத்திற்கு பெயர் வைத்தாரோ தெரியவில்லை ஆனால் சரியான எமகண்டமாக இருக்கும் போலிருக்கின்றது
கிட்டதட்ட 1 டஜன் திராவிட கழகங்கள் இருக்கின்றன, இப்பொழுது தினகரன் எம்ஜிஆர் அம்மா திராவிட கழகம் என ஒன்றை தொடங்கிவிட்டார்
எம்.அ.திமுக அதாவது MADMK என்ற புதிய கட்சி உருவாகியிருக்கின்றது, தினகரன் தொடங்கி இருக்கின்றார்
அண்ணா பெயர் இல்லை, நேரடியாக ராமசந்திரனுக்கு சென்றாயிற்று
எங்காவது சுவர் விளம்பரத்தில் MAD MK என பிரித்து எழுதினால் முடிந்தது விஷயம், ஆனால் அவர் கட்சி உறுப்பினர்களுக்கு மிக சரியாக பொருந்தலாம்
.
கட்சியின் கொள்கை என கேட்டால் யாருக்கும் தெரியாது, தினகரனுக்கே தெரியாது
அதிமுகவின் ஒரே கொள்கை கலைஞர் எதிர்ப்பு, இப்பொழுது தினகரனின் எஅதிமுகவின் கொள்கை பன்னீரை ஒழிப்பது, பழனிச்சாமியினை பஞ்சாமிர்தம் செய்வது
இதை தவிர வேறு கொள்கை இருக்க வாய்ப்பில்லை
திமுகவினை எதிர்த்து அதிமுக பிறந்தது இப்பொழுது அதிமுகவினை எதிர்த்து எஅதிமுக பிறந்திருக்கின்றது
கலைஞர் நலமாக இருந்திருந்தால் அட்டகாசமாக கலாய்ப்பார்
“நியாயம் அநியாயம் , தர்மம் அதர்மம் என்பது போல திமுகவினை எதிர்க்க அதிமுக உருவானது
இப்பொழுது அதிமுகவினை அழிக்க எமனாக எஅதிமுக உதித்திருக்கின்றது, எமன் அதிமுக என்பதன் சுருக்கம் எஅதிமுக”