தமிழக பஸ் நிலையங்களில் Wifi வசதி : செய்தி

தமிழக பஸ் நிலையங்களில் Wifi வசதி : செய்தி

தமிழக பஸ் நிலைய கூரை இடிந்து பலர் சாகின்றனர் அதற்கு தீர்வில்லை, குப்பை கூளமாகவும் நாறிப்போன கழிவறை போலும் , மக்கள் அமர்ந்திருக்க வழி கூட இல்லா நிலையில் Wifi வசதியாம்

பஸ் நிலையங்களை விடுங்கள், முதலில் பேருந்தே உருப்படி இல்லை, ஆப்ரிக்க நாடுகளில் ஓடும் தகரலாரி போல் எல்லா பேருந்தும் இருக்கின்றது, ஏறிவிட்டு உயிரோடு இறங்கினால் சாகசம், அவ்வளவு மோசம்

உடுத்த உடையில்லா பொழுது கொண்டையில் ஏன் தாழம்பூ?


மோடி என்ற தனிமனிதனை எதிர்க்க இவ்வளவு கூட்டமா? : பக்தர்கள் பரவசம்

ஹிட்லர், போல்பாட், பிரபாகரன் போன்ற தனிமனிதர்களை உலகமே சேர்ந்துதான் விரட்டியது

ஏன் ஆனானபட்ட சர்வாதிகார இந்திராவினை எதிர்க்க கூட இந்தியா ஒன்றுதிரண்டது என்பது வரலாறு.

சர்வாதிகரிகளை எப்பொழுதும் பலர் ஒன்று கூடித்தான் வீழ்த்துவார்கள், இதில் என்ன ஆச்சரியம்?