கமலஹாசன் தமிழிசை இணைய சர்ச்சை

இப்பொழுதெல்லாம் இணையத்தில் ஒருவர் கணக்கில் இன்னொருவர் ஊடுருவது சாதாரணம்

அப்படி தமிழிசையின் விக்கிபீடியா கூட மாற்றபட்டது, இணையம் வருவதே தமிழிசையினை கலாய்க என பலர் இருப்பது அவருக்கும் தெரியும் என்பதால் சிரித்துகொண்டு நகர்ந்துவிட்டார்

இப்பொழுது கமலஹாசன் தமிழிசை இணைய சர்ச்சையும் அப்படியே

இதில் இப்பொழுது புதிய விஷயம் வந்தாயிற்று

இதுவரை இணையத்தில் பிரபாகரனை தேடினால் விக்கிபீடியா வரை அவரை தீவிரவாதி என காட்டும், இப்பொழுது அவர் ராணுவ வீரர் என மாறிவிட்டது

ஆனால் எந்த அங்கீகரிக்கபட்ட நாட்டின் ராணுவவீரர் என கேட்டால் பதில் இல்லை, சிங்கள வீரராக இந்திய படைகளை விரட்டினார் , இலங்கையினை ஆக்கிரமிக்க வந்த ராஜிவினை கொன்றார் என இனி சிங்களன் சொன்னால்தான் உண்டு

சிரியாவிலே 25 ஆயிரம்பேர் அமர கூடிய விமானத்தை இறக்கி, அதன் பெட்ரோலை திறந்துவிட்டு இன்னும் 100 பேரை ஏற்றி எடையினை சமன் செய்து பறந்த (பெட்ரோல் இல்லாமலே பறந்ததாம்) தமிழனுக்கு பிரபாகரனை ராணுவ வீரனாக மாற்றுவதா கடினம்

மாற்றிவிட்டார்கள்

இப்பொழுது அங்கிள் சைமன் வந்து நான் தான் சுந்தர் பிச்சையிடம் பேசி இதனை செய்தேன் என சொல்வார் பாருங்கள்