பல நாடுகளில் உஷாராக புன்னகைக்கின்றது ரஷ்ய உளவுதுறை
லண்டனில் ரஷ்ய உளவாளிகள் தொடர்ந்து கொல்லபட, உங்கள் உறவே வேண்டாம் கிளம்புங்கள் என ரஷ்ய அதிகாரிகளை பிரிட்டன் வெளியேற்றியது
உங்கள் கொடியினையும் கொண்டு செல்லுங்கள் என அவமானமாய் அனுப்புகின்றார்கள், புட்டீன் பார்த்துகொண்டே இருக்கின்றார்
இந்நிலையில் நியூசிலாந்தில் 3 மாதம் முன்பு திடீரென உடலநலமின்றி போன ரஷ்ய உளவாளி ஒருவரை திடீரென சோதிக்க ஆரம்பித்துவிட்டார்கள், அவரும் லண்டன் பாணியில் தாக்கபட்டார் என்கின்றார்கள்
மிக நச்சுவாயு ஒன்றை ரஷ்ய உளவுதுறை பயன்படுத்தியது என பிரிட்டன் குற்றம்சாட்ட, இயற்கை எரிவாயு தவிர ரஷ்யாவிடம் ஏதுமில்லை என்கின்றது ரஷ்ய தரப்பு
லண்டனை தொடர்ந்து நியூசிலாந்திலும் ரஷ்ய உளவாளி தாக்கபட்டிருப்பது ரஷ்யாவிற்கு உளவு பார்த்தவர்கள் மத்தியில் கிலியினை ஏற்படுத்திற்று, ஆளாளுக்கு அலறுகின்றார்கள், சிலர் பதுங்குகின்றார்கள், சிலர் ஓடுகின்றார்கள்
ரஷ்ய உளவுதுறை எதிர்பார்த்து இதைத்தான், சந்தேகத்திற்கிடமான நபர்கள் பல நாடுகளில் உஷாராக புன்னகைக்கின்றது ரஷ்ய உளவுதுறை
இனி அதிரடி உளவாளி கொலைகள் அதிகரிக்கலாம்