பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்திய வெளியுறவு கொள்கைகள் மறுபடியும் சறுக்குகின்றன

இந்திய வெளியுறவு கொள்கைகள் மறுபடியும் சறுக்குகின்றன, ஓமானிற்கு மோடி சென்றுவந்த பின்பு ஈரானின் நகர்வில் கோபம் தெரிகின்றது

ஈரானின் சபாஹரில் பாகிஸ்தான் சீனாவிற்கு செக் வைக்க இந்தியா துறைமுகம் அமைத்தது, மிக அருமையான திட்டம் அது

ஆனால் ஓமானில் இந்தியா கால்பதித்ததும் இன்னபிற விஷயங்களும் ஈரானை சீண்டியிருக்கின்றன, பதிலுக்கு பாகிஸ்தானும், சீனாவும் இங்கு வரலாம் என அழைப்பு விடுக்கின்றது ஈரான்

ஈரானில் இந்திய பிடி நழுவுவது தெரிகின்றது

இலங்கையில் சீனா அளவுக்கு மீறி நுழைகின்றது என்கின்றது இந்தியா, இதுவரை இல்லா நிலையில் கச்சதீவை இலங்கை கடற்படை தன் வரைபடத்தில் எடுத்தாயிற்று

இது நல்ல விஷயம் அல்ல, ஒருவித எச்சரிக்கை

இந்தியா சேதுசமுத்திர திட்டம் செயல்படுத்தபடும் என அறிவித்து இலங்கைக்கு பதிலடி கொடுக்கின்றது, அதற்கான வேலைகளில் இறங்கிற்று

நீதிமன்றத்தில் கூட ராமர்பாலத்திற்கு ஆபத்தின்றி சேதுகால்வாய் தொடங்கபடும் என சொல்லிவிட்டது

இனி இலங்கை எம்மாதிரி பதிலளிக்க போகின்றது என தெரியவில்லை ஆனால் ஏதும் செய்யும்

ஆக இந்தியா சுற்றி நடக்கும் விஷயங்கள் எதுவும் இந்தியாவிற்கு சாதகமாக இருப்பதாக தெரியவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *