சசிகலா புஷ்பாவின் மறுமணத்தில் பெரும் சிக்கல்
இந்த சசிகலா புஷ்பாவின் மறுமணத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுவிட்டதால் அம்மணிக்கு ஒலிக்க இருந்த கெட்டி மேளம் தாமதமாகிவிட்டது
அதாகபட்டது சசிகலா புஷ்பா இரண்டாம் திருமணம் செய்யும் ராமசாமி ஏற்கனவே இரண்டு திருமணம் செய்தவராம், இரண்டாம் மனைவியினை அவர் இன்னும் விவாகரத்து செய்யவில்லையாம்
இரண்டாம் மனைவி கைகுழந்தையோடு நீதிமன்றம் சென்று கதறுகின்றார், இதனால் சிக்கல் வந்தாயிற்று
இந்த ராமசாமி இரண்டாம் மனைவியிடம் தான் நீதிபதி என்றுதான் ஏமாற்றினாராம், சசிகலா புஷ்பாவிடம் தலமை தேர்தல் அதிகாரி என சொல்லி ஏமாற்றி இருக்கலாம்
விஷயம் விஸ்வரூபமாகின்றது, சசிகலா புஷ்பா கடும் அப்செட்டில் இருப்பதாக செய்திகள் வருகின்றன
அவருக்கென்ன? ராஜ்யசபாவில் இந்த நாட்டில் ஒரு பெண் எம்பி திருமணம் செய்ய உரிமை இல்லையா? என கதற வாய்ப்பா இல்லை?
அட்டகாசமாக கதறலாம், ராஜ்யசபா துணை சபாநாயகருக்கு மகா சிக்கலான நேரம் வரப்போகின்றது
இந்த திருமணத்திற்காக அவசர விவாகரத்து பெற்றார் சசிகலாபுஷ்பா
என்ன ராசியோ தெரியவில்லை இரு சசிகலாவிற்கும் தாலி தங்காத நேரமிது