இயல்பிலே டிரம்ப் ஒரு பிசினஸ் மேன்
டிரம்ப் ஓசைபடாமல் புதிய யுத்தத்தை அறிவித்துவிட்டார், இது ராணுவ போர் அல்ல, மாறாக பொருளாதார போர்
நிச்சயம் அமெரிக்கா என்பது சர்வ வல்லமை பொருந்திய தேசம், கிடைக்கும் ஒவ்வொரு வாய்பிலும் சம்பாதிப்பார்கள். அதன் வளமும் உலகின் எந்த மூலையில் இருந்து யாரும் அமெரிக்காவோடு வியாபாரம் செய்யும் வாய்ப்பும் அதற்கு துணைபுரிகின்றன
இப்பொழுது என்ன சிக்கல்?
50 வருடம் முன்புவரை அமெரிக்காதான் உற்பத்தியில் நம்பர் 1ல் இருந்தது. போர்டு கார் முதல் தாம்ஸன் டிவி என எல்லா முண்ணணி நிறுவணங்களும் அவர்களிடமே இருந்தன
ஜப்பானின் கோபம் தணிய அதனை கூட்டாளி ஆக்கியது, தென்கொரியாவினை வளர்த்தது, தைவானை வளர்த்தது என அமெரிக்காவின் அரசியல் கணக்கில் எல்க்ட்ரானிக்ஸ் பொருள் கார் உற்பத்தி எல்லாம் ஜப்பானும், தென் கொரியாவும் தட்டி சென்றன
அங்கு குறைந்த கூலி என்பது இன்னொரு கோணம் , சீனாவும் அதில் வந்தது.
இது அமெரிக்காவில் பின்னடவை ஏற்படுத்தினாலும் எண்ணெய் பிசினஸ், ஐடி,செய்ற்கைகோள் பிசினஸ் என ஓரளவு அமெரிக்காவின் தொழில்துறை நின்றது, முக்கியமாக உலக பணமான அவர்கள் டாலர்.
இப்பொழுது டிரம்ப் வந்துவிட்டார் அல்லவா? இயல்பிலே அவர் பிசினஸ் மேன்
1960களில் டிவி கம்பெனி,கார் கம்பெனி, கம்பியூட்டர் கம்பெனி என பிசியாக இருந்த அமெரிக்கா பின் இந்த வேலை வாய்ப்பெல்லாம் தென்கிழக்கு ஆசியாவிற்கும் சீனாவிற்கும் செல்ல அமெரிக்காவில் வேலை தட்டுபாடு ஆனது
பழைய காலத்தினை மீட்டெடுப்பேன் என சொல்லி ஆட்சிக்க்கு வந்தார் டிரம்ப்
வெளிநாட்டு பணியாளர்களை குறிவைத்து பல சட்டங்களை போட்டுகொண்டே வந்தார்
இப்பொழுது அடுத்த அடியாக, உலகெல்லாம் இருந்து எதெல்லாம் வரி இல்லாமல் அல்லது குறைந்த வரியில் அமெரிக்காவில் வந்ததோ அதனை அடிக்கின்றார்
சீனாவில் இருந்துவரும் இரும்புக்கு வரியினை உயர்த்திவிட்டார், இதனால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்கின்றார்
இது சீனாவின் ஏற்றுமதியினை பாதிக்கும் என்பதால் அந்நாடு சீறுகின்றது டிரம்ப் கண்டுகொள்ளவில்லை
இன்னும் பல தொழில்நுட்பங்களின் காப்புரிமை அமெரிக்காவிடமே இருப்பதால் அவர்கள் நினைத்தால் ஒரே நாளில் ஜப்பானையும், தென்கொரியாவினையும் மிரட்ட முடியும்
சீனாவின் ஏற்றுமதியில் கொள்ளிவைத்த அமெரிக்கா இனி அடுத்தநாட்டு ஏற்றுமதியிலும் கைவைக்க எவ்வளவு நேரமாகும் என உலகம் அஞ்சுகின்றது
நிச்சயம் உலகின் சக்திவாய்ந்த நாடு இன்றளவில் அதுதான், தன் ஒவ்வொரு அசைவிலும் உலகையே அதனால் ஆட்டிவைக்க முடிகின்றது