ஜெயா டிவி நிர்வாகி விவேக் மீது புது குற்றசாட்டு
சசிகலா அண்ணன் மகனும் , ஜெயா டிவி நிர்வாகியுமான விவேக் என்பவர் மீது புது குற்றசாட்டு கிளம்புகின்றது
அதாவது எப்பொழுதும் கோர்ட்டுக்கும் வழக்குக்கும் அலைவோம் என தெரிந்து குடும்பத்தில் வழக்கறிஞர் தேவை என சசிகலா குடும்பம் அறிந்து ஒரு வழக்கறிஞரை குடும்பத்தில் உருவாக்க நினைத்திருக்கின்றது
விவேக் படிக்க வைக்கபட்டிருக்கின்றார், ஆனால் வெளிநாட்டு மாணவர் என்ற வகையில் சேர்க்கபட்டிருக்கின்றார்
ஜெயா ஆட்சியில் எல்லாமே சாத்தியம் என்பதால் அவர் படித்ததோ, இப்படி இணைந்ததோ வெளி தெரியவில்லை
இப்பொழுது மன்னார்குடி கும்பலின் நிதி ஆதாரத்தை நிர்வகிக்கும் நபராக விவேக் தெரிவதால் அவரை முடக்கும் முயற்சியில் ஒன்றாக இது வெளிவருகின்றது
அவர் கைது செய்யபடலாம் என்கின்றார்கள், ஆனால் இவரை யார் சேர்த்தார்? யார் சட்டம் படிக்க அனுமதித்தார் என்றெல்லாம் கேட்க கூடாது
இதில் விவேக் கைது செய்யபடலாம் என்கின்றார்கள்
நாம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்
சட்டம் மட்டும்தான் இங்கு திருட்டுதனமாக படித்திருக்க முடியுமா?
மருத்துவம் அப்படி படித்திருக்க முடியாதா?
தமிழக அரசியலில் டாக்டர்கள் சிலர் செய்யும் அழிச்சாட்டியம் தாங்கமுடியவில்லை, அவர்கள் பேசும் அறிவை கண்டால் 5ம் வகுப்பு கூட தாண்டியிருக்க முடியாது
கொஞ்சம் அதையும் சோதித்து பார்க்க கூடாதா?