அரசியலுக்கு பல முகம் வேண்டும்

Image may contain: 2 people, people smiling, people standing and suit

அரசியலுக்கு பல முகம் வேண்டும் அதுவும் உலக அரசியல் வல்லரசு என்றால் அது உலகை மிரட்ட ஒரு முகமும், உலகில் சமாதானம் பேச இன்னொரு முகத்துடனும் அலைய வேண்டும்

அமெரிக்கா இதில் பயங்கரமான பயிற்சி பெற்ற நாடு, நார்வே தூது குழு என அமைதி முகம் , இஸ்ரேல் எனும் பயங்கர முகம் என பல அரசியல் செய்யும் நாடு

உலக வல்லரசு என்ற பெரும் கனவில் உள்ள சீனாவிற்கும் இந்த தந்திரம் பிடிபட்டுகொண்டது, வடகொரியா தன் இன்னொரு முகம் என்பதை காட்டியாயிற்று

வடகொரிய அதிபர் தன் முதல் வெளிநாட்டு பயணமாக சீனா சென்றார், ரயிலில் ரகசியமாக சென்றார். சீன அதிபரும் அவரும் ஒன்றாக போஸ் கொடுத்திருக்கின்றார்கள்

இதன் மூலம் உலகிற்கு சீனா சொல்லவரும் விஷயம் சில‌

கிழக்காசியாவின் அமைதியினை நிறுத்தும் ஒரே சக்தி நாங்கள் தான். வடகொரியாவினை கட்டுபடுத்தும் சக்தியும் எங்களிடம் மட்டும்தான் உண்டு

அமைதி பேச்சுக்கு அவரை அழைத்து வர எங்களால் மட்டுமே முடியும்

சீனாவின் அணியிலே வடகொரியாவும் உள்ளது

இப்படியாக பல விஷயங்களை உலகிற்கு சொல்கின்றது சீனா

மே மாதம் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தபோகின்றார் வடகொரிய அதிபர், அதற்குள் அவர் சீனாவிடம் ஆலோசனை கேட்க சென்றிருப்பது டிரம்பிற்கு பல் கடிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது