காலம்வரை கண்டே பிடிக்கமுடியாத செலவு எது தெரியுமா?
ரபேல் போர் விமானம் வாங்கிய விலையினை கேட்டால் அது ரகசியம் என்றார்கள், இப்பொழுது ரஷ்ய கப்பலை வாங்கிய விலையினை கேட்டாலும் அதே பதில்
ஆனால் இந்த ரஷ்ய கப்பல் காங்கிரஸ் அரசால் வாங்கபட்டது, 1987ல் ரஷ்ய கடற்படையிலிருந்து அகற்றபட்ட கோர்ஸ்கோவ் எனும் கப்பலை பெயின்ட் அடித்து நம் தலையில் விற்றது ரஷ்யா
மிக பழைய கப்பலுக்கு ஏன் இவ்வளவு விலை கொடுக்க்க வேண்டும்? புதிதாக வாங்கினால் என்ன என்ற சர்ச்சை அப்பொழுதே வந்தது
இப்பொழுது இது தொடர்பான வழக்கில் பாதுகாப்பு அமைச்சகம் இதெல்லாம் ராணுவ ரகசியம் என சொல்லிவிட்டது
காரணம் இது பழைய கப்பலை மேம்படுத்தி வாங்கிய தொகை என்றார்கள், என்ன மேம்பாடு என நீதிமன்றம் கேட்க அது ராணுவ ரகசியம் என அட்டகாசமான பாயிண்டை பிடித்து வெளியேறிவிட்டது பாதுகாப்பு அமைச்சு
ரபேல் விமான தொகையினை மட்டும் சொல்ல முடியுமா? கோர்ஸ்கோவ் கப்பல் காங்கிரஸ் வாங்கியது அதனை சொன்னார்களா? என தப்புகின்றது பாஜக
என்ன ரகசியமோ?, ஆனால் இதெல்லாம் கூட பிரான்ஸ், ரஷ்ய ஆலைகளில் விசாரித்தால் தெரியலாம்
காலம்வரை கண்டே பிடிக்கமுடியாத செலவு எது தெரியுமா?
உலகிலே மிக பெரிய ரகசியம் தமிழ்நாட்டில் வோட்டுக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்பது, அந்த விலை ஒரு காலம் தெரிய போவதே இல்லை