ஆட்டிசம் எனும் மன இறுக்கம்

ஆட்டிசம் எனும் மன இறுக்கம் என்பது சில குழந்தைகளை பாதிக்க கூடியது, இவர்கள் வித்தியாசமாக இருப்பார்கள், நாம் சொல்வதை சரியாக புரிந்துகொள்ள அவர்களால் முடியாது, அவர்களை புரிந்துகொள்ளவும் நம்மால் முடியாது

திடீரென சிரிப்பார்கள், கத்துவார்கள், மகா அமைதி ஆவார்கள், மெதுவாக காரியங்களை செய்வார்கள் நிச்சயம் இயல்பான மனிதர்களோடு அவர்கள் பழக முடியாது.

உண்மையில் “அஞ்சலி” படத்து குழந்தை கதை கூட ஆட்டிசம் கதைதான், மன இறுக்கம் எனும் ஆட்டிசம் என்பதை அதனை விட எளிதாக சொல்ல முடியாது

உலகெல்லாம் ஏராளமான “சிறப்பு குழந்தைகள்” அப்படி உள்ளன, இதனை சரி செய்யலாம் என்றும் தகுந்த பயிற்சிகள் மூலம் சரி செய்யலாம் என்கின்றார்கள் மனநல மருத்துவர்கள்

இதனால் உலகெல்லாம் இந்தவாரம் ஆட்டிசம் குறைபாடுள்ளோர் தினமாக அனுசரிக்கபடுகின்றது. ஆட்டிசம் கொண்ட குழந்தைகளை சரிபடுத்துவது எப்படி என்றெல்லாம் பேசிகொண்டிருக்கின்றார்கள்

இங்கோ ஆட்டிசத்தால் பாதிக்கபட்டவர்களை முதல்வராகவும் அமைச்சர்களாகவும் ஆக்கிவிட்டோம்,

பிரதமருக்கு கூட அந்த குறைபாடு இருக்கலாம் போல‌

குழந்தைகள் என்றால் சரி செய்யலாம், இவர்களை என்ன செய்வது? நம் தலைவிதி அப்படி