தமிழன் என்று ஒன்று சேர்வான்? கன்னடனின் பலமே அதுதானே

என்ன இருந்தாலும் தமிழகத்தில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் சக்தி உள்ள ஒரே கட்சி திமுக என்பதில் சந்தேகமில்லை

மறுபடியும் அதனை நிரூபித்திருக்கின்றது திமுக‌

உறங்கி கொண்டிருந்த டிராகனை உசுப்பிவிட்டோமே என பலர் அரண்டு நிற்பது புரிகின்றது

சிஸ்டமும், மய்யமும் இன்னும் சில திடீர் புரட்சியாளர்களும் ஒரு மாதிரி முழிப்பதும் தெரிகின்றது

சிலிர்த்தெழுந்த சிம்மமாய் சீறி நிற்கின்றது திமுக.

முக ஸ்டாலினும் அதிமுக தங்கள் போராட்டத்தில் பங்குகொள்ள பழனிச்சாமியினை அழைக்கின்றார், நல்ல விஷயம் அது

ஆனால் பழனிச்சாமியின் சங்கிலி தடுக்கின்றது

திமுக நடத்தும் போராட்டம் மாபெரும் எழுச்சி, இதில் எல்லா தமிழரும் கட்சி பேதமின்றி தமிழக நலன் என கலந்திருந்தால் இன்னும் பெரிய அதிர்வினை கொடுத்திருக்கலாம்

ஆனால் தமிழன் என்று ஒன்று சேர்வான்? கன்னடனின் பலமே அதுதானே