இயற்கையினை யார் வெல்லமுடியும்?

Image may contain: outdoor

முன்பு உலகெல்லாம் ஒரே நிலம் இருந்ததாகவும் பின் கண்டங்கள் பிரிந்ததாகவும் ஆய்வாளர்கள் சொல்வார்கள்,

இப்படி ஒன்றாய் இருந்து பிரிந்ததால்தான் மனிதர்களும் மிருகங்களும் எல்லா கண்டத்திலும் வியாபித்தன என்பது தியரி, இதுவரை ஆதாரமில்லை

ஆனால் நம் கண்முன்னே ஆப்ரிக்காவில் நடக்கின்றது

பெரும் மழை கொட்டியபின் நிலம் கென்யாவில் பிளந்தது, ஏதோ சிறிய பள்ளம் என பார்த்தால் 50 அடி ஆழம், அகலத்தில் கிட்டதட்ட 3000 கிமீ தூரத்தில் அது பிளந்திருக்கின்றது

இது கண்டம் பிரியும் அறிகுறி என்றாலும் பொதுவாக நிலநடுக்கம், எரிமலை வெடிப்பிற்கு பின்னால் இப்படி நடந்தால் உறுதியாக சொல்லலாம் இது எதனால் என விஞ்ஞானிகள் தலையினை பிய்கின்றார்கள்

இது மிக மெதுவாக அதிகரித்து ஒரு காலத்தில் தனி கண்டம் ஆகிவிடும் என்கின்றார்கள்

எவ்வளவு காலம் என்றால் 1 மில்லியன் வருடங்களாம், ஆனால் சொல்லமுடியாது இயற்கையில் எதுவும் நடக்கலாம்

இவ்வுலகில் நாட்டுக்கு நாடு பிளவு, கட்சிக்கு கட்சி பிளவு என நடந்துகொண்டிருக்கின்றது என பார்த்தால் கண்டமும் இரண்டாக பிளக்கின்றதாம்

இயற்கையினை யார் வெல்லமுடியும்? அதன் ஒரு அசைவினை நம்மால் மாற்றமுடியுமா? நிச்சயம் முடியாது நடப்பதை பார்த்துகொண்டே இருக்க வேண்டியதுதான்

Image may contain: cloud and food