மானமும் வெட்கமும் இல்லா தியாகிகள் அவர்கள்

Image may contain: 2 people, people sitting

தலைவர்கள் எந்நாளும் தியாகிகள், அவர்கள் எதனையும் கண்டுகொள்ளமாட்டார்கள். எல்லாவற்றையும் மறந்து பழகுவார்கள், யாரிடமும் மண்டியிடுவார்கள் வோட்டுக்காக , கூட்டணிக்காக‌

காக்காவிற்கு 4 வோட்டு உண்டென்றால் அதோடு கத்துவார்கள், சாக்கடை புழுவிற்கு 2வோட்டு உண்டென்றால் அந்த சாக்கடையிலும் நெளிவார்கள்

மானமும் வெட்கமும் இல்லா தியாகிகள் அவர்கள்

ஆனால் தொண்டர்கள் அப்படி அல்ல, அவர்கள் உணர்ச்சியும் வெறியும் கொண்டவர்கள். இது இப்போது திமுகவில் அது நன்றாக தெரிகின்றது?

எப்படி?

என்னதான் வைகோவினை திமுக தரப்பு வோட்டு கணக்கிற்காக கொண்டு சென்றாலும் வைகோ செய்த கடும் திமுக துரோகங்களை மன்னிக்க எந்த திமுக தொண்டனும் தயாராக இல்லை

சாதாரண பஞ்சாயத்து தலைவரான வைகோவினை எம்பி ஆக்கி, கழகத்தின் போர்வாள் என கொண்டாடியவர் கலைஞர்

ஆனால் புலிகளுக்காக கலைஞரை மீறி வைகோ சென்றதும், கலைஞரை விட பிரபாகரன் முக்கியம் என நினைத்தது துரோகத்தின் முதல்படி

ராஜிவ் கொலைவழக்கில் வைகோ தொடர்பினாலே திமுக தடை செய்யபடும் அளவுக்கு சென்று 1 எம்.எல்.ஏ எனும் மிக மோசமான நிலைக்கு சென்றது

அடுத்த தேர்தலில் அது எப்படி எழும்? என எதிர்ப்பார்ப்பு நிலவிய நேரத்தில்தான் வைகோ எனும் சண்டாளன் கட்சியினை உடைத்தார்

அந்நேரம் தென் தமிழக திமுக அவர் பின்னால்தான் இருந்தது. யார் செய்த புண்ணியமோ புலிகளுக்கு இங்கு அறவே ஆதரவு இல்லாமல் போனதும், ஜெயலலிதாவின் மாபெரும் தவறும் திமுகவிற்கு வாய்ப்பானது

இல்லை என்றால் படுசரிவினை திமுக சந்தித்திருக்கும் உபயம் வைகோ

அதன் பின்னும் திமுக எதிர்ப்பினை வைகோ விடவில்லை, வாஜ்பாய் அரசு, மன்மோகன் சிங் அரசுகளில் எல்லாம் திமுகவிற்கு அவர் கொடுத்த குடைச்சல் கொஞ்சம் அல்ல‌

உச்சமாக அதிமுக கூட்டணிக்கு அவர் சென்றதும் இன்னும் சில காரியங்களும் திமுகவிற்கு அவர் மேல் அவ்வளவு வெறுப்பை கொடுத்தன.

வைகோவிடம் இருந்து பிரிந்த பழைய திமுகவினர் கலைஞர் பக்கம் வர வர வைகோவிற்கு உள்ளம் கொதித்தது, செய்ய கூடாத திமுக எதிர்ப்பு அத்தனையும் செய்துவிட்டுத்தான் தோல்வியுற்று ஓய்ந்தார்

இருந்தாலும் பொடோவில் உள்ளே கிடந்த வைகோவினை கலைஞர் நேரில் சென்று பார்த்தார், வைகோவிற்கு கிடைத்த கடைசி சந்தர்ப்பம் அது

ஆனாலும் வெளிவந்தபின் தன்னை சிறையில் அடைத்த ஜெயா பக்கமே சென்றார் வைகோ, அதாவது அந்த அளவு திமுக வெறுப்பு அவருக்கு இருந்தது

உச்சமாக அவருக்கு கிடைத்ததுதான் ஈழசிக்கலும் இறுதிபோரும்

சைமன் பேசுவார் அவருக்கு ஒன்றும் தெரியாது, பழ.நெடுமாறன் பேசுவார் அது வேறு விஷயம்

ஆனால் கலைஞர் புலிகளுக்கு 1990 முதல் செய்த காரியங்களை எல்லாம் அருகிருந்து பார்த்தவர் வைகோ, பத்மநாபா கொலைசெய்துவிட்டு புலிகள் தப்பியது முதல் அமைதிபடையினை திரும்பபெற் கலைஞர் செய்த முயற்சி வரை அருகிருந்து கண்டவர்

அந்த வைகோவும் மா.நடராசனின் மேடையில் இருந்துகொண்டு கலைஞர் ஈழம் கொன்றார், ஈழ அழிவுக்கு காரணம் கலைஞர் என சொன்னதை மிக அதிர்ச்சியோடு பார்த்தான் திமுக தொண்டன்

அதனை அவனால் எப்படி மறக்க முடியும்?

கடந்த தேர்தலில் திமுக தோற்று இந்த தமிழகம் இந்த மாபெரும் சிக்கலுக்கு அடிகோலியவர் இதே வைகோ

கலைஞர் கூட்டணிக்கு வர இருந்த விஜயகாந்தினை முதல்வர் ஆசை காட்டி வாக்குகளை பிரிக்க வைத்து விஜயகாந்தினை சரித்து, கலைஞரை ஆட்சிக்கு வரமுடியாமல் செய்த காரியம் வைகோவுடையது

அது மட்டுமா? உச்சமாக கலைஞர் ஆட்சிக்கு வருவதை என் ராஜதந்திரத்தால் ஜெயித்தேன் என சொல்லிகொண்டிருந்தார்

கலைஞரை சாட, இவர்கள் உலகின் பழமையான தொழில் செய்யலாம், என சொல்லிவிட்டு நாதஸ்வரம் ஊத செல்லலாம்ன் என சொன்னதை எல்லாம் எந்த திமுககாரனும் மறக்க மாட்டான், மன்னிக்கமாட்டான்

இன்று கலைஞர் ஓய்வு, ஸ்டாலின் கலைஞர் அளவு தந்திரவும் முன்னெச்செரிக்கையும் இல்லாதவர், ஆயினும் வைகோ பல் புடுங்கிய பாம்பு என நினைத்து அருகில் அமர்த்துகின்றார்

வைகோ உடம்பெல்லாம் விஷம் உள்ள மனிதர் என்பது ஸ்டாலினுக்கு புரியவில்லை

வைகோ மனம் அவ்வளவு நல்ல மனம் அல்ல, எதிர்காலத்தில் இன்னும் திமுகவினை உடைக்கும் திட்டமும், இன்னும் பல காரியங்களும் அந்த மனதில் நிச்சயம் இருக்கும்

அட அவ்வளவு ஏன் நாளையே டிடிவி தினகரன் குக்கரை காட்டி விசிலடித்தால் பறந்தே விடுவார் வைகோ

இந்த விஷ ஜந்துவினை திமுக தலமை அருகில் அமர்த்தி இருப்பதை நிச்சயம் உண்மையான திமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்

அவர்கள் கொதிக்கத்தான் செய்வார்கள், 1990க்கு பின் திமுக அடைந்த வீழ்ச்சியில் வைகோவிற்கு நிரம்ப பங்கு உண்டு மறுக்கமுடியுமா?

இதே திமுகவிற்காக விஜயகாந்தினை மனமார எதிர்த்து தன் சினிமா வாழ்வினை தொலைத்த வடிவேலு, இன்று விஜயகாந்திற்காக திமுகவினர் மறந்த அந்த வடிவேலு திமுக தொண்டனின் மனதில் ஒரு ஓரத்தில் நன்றியோடு நிற்கின்றான்

ஆனால் வைகோ எனும் பெயர் ஒவ்வொரு திமுக தொண்டனின் உள்மனதிலும் ஆழமான காயமாக பதிந்திருக்கின்றது

இப்பொழுதும் பாருங்கள் காவேரி போராட்டத்தில் திமுக அட்டகாசமாக ஸ்கோர் செய்யும் நேரமிது, ஆனால் எங்கே திமுக கவனம் பெற்றுவிடுமோ என அஞ்சிய வைகோ சாதுர்யமாக சைமனை வம்புக்கு இழுக்கின்றார்

இவரும் சைமனும் கட்டி தழுவா தழுவலா? ஒரே மேடையில் இருந்து கலைஞரை சாடாத சாடலா

ஆனால் மிக சரியாக திமுக நற்பெயர் பெறும் நேரம் ஏன் வைகோ சைமன் மேல் சீறவேண்டும்?

வைகோவின் மனம் ஒருநாளும் திமுகவிற்கு சாதகமாக சிந்திக்காது, அது எப்படி திமுகவினை ஒழிக்கலாம் எனும் நயவஞ்சக திட்டத்திலே சுற்றிகொண்டிருக்கும், அம்மனிதர் நம்ப தகுந்தவர் அல்ல‌

அவரால் திமுக பட்ட இழப்பும் கொஞ்சமல்ல‌

தலைவர்கள் என்ன கணக்கும் போடட்டும், ஆனால் உண்மையான திமுக தொண்டனின் மனதிற்கும் அவனின் உள்ள கொதிப்பிற்கும் மதிப்பு கொடுக்கட்டும்

வைகோ வந்ததால் திமுக பலம் பெரிதாக கூட போவதுமில்லை, அவர் இல்லாத காலத்தில் திமுக பலம் பெரிதும் குறைந்ததுமில்லை

யானை என தன்னை நம்பிய சிறுநரி அடிபட்டு மிதிபட்டு ரத்தகாயத்துடன் அலைந்த வேளையில், அய்யோ இது யானை என மறுபடியும் திமுக நினைத்தால் அதனை விட கொடுமை ஏதும் இருக்க முடியாது

திமுக வைகோவினை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால் கட்சிக்கும் நல்லது, திமுக தொண்டர்களின் உற்சாகத்திற்கும் நல்லது