எவன் ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு அடிமைதான்

மோடி தமிழ்நாட்டில ஒரே போராட்டமா இருக்கே? என்ன நினைக்கிறீங்க?
நானும் ஜல்லிகட்டு மாதிரி கிளம்புவாங்கண்ணு பயந்துட்டேன், நல்லவேளையா அப்படி வரலை. அது இவனுக கட்சிகள் செய்யாத போராட்டம், அதனால ஜெயிச்சிட்டு, இனி அப்படி நடக்காது
அதில் என்ன சந்தோஷம் உங்களுக்கு?
1970க்கு பின் நடந்த எந்த தமிழக போராட்டமும் வெற்றி பெறவில்லை, மொழிப்போரோடு உண்மையான வெறிபோராடம் அங்கு முடிந்தது , அதன்பின்னால் நடந்தது எல்லாம் அரசியல் டிராமா
அப்படியா?
நீங்களே சொல்லுங்கள் எது வென்றது? கச்சதீவை மீட்டார்களா? ஈழப்போரை நிறுத்தினார்களா? அணுவுலை நிறுத்தினார்களா? எதை செய்யமுடிந்தது
ஆனாலும் அந்த விவசாயிகள் பாவம் பாஸ்?
எது அவனுகளா? மகராஷ்ட்ராவில வந்தமாதிரியா வந்தானுக? அந்த அய்யாகண்ணு ஆடிகார் வச்சிருக்காராம் அவர் விவசாயியா? உண்மையான விவசாயி எல்லாம் அவன் பாடு அவனோடன்னு அழுதிட்டு ஏதோ பொழப்ப பாக்குறான், அங்கே கத்துறது எல்லாம் கட்சிக்காரன், அதான் மொத்தமா வரமாட்டான்.
அதுவும் சரிதான் ஏன் அப்படி?
அங்கே பாருங்கள், அவனவனுக்கு ஒரு கொள்கை அதற்கொரு தலைவன், அவனுக்கொரு கூட்டம். இப்படி சுமார் 2 டஜன் கோஷ்டிகள் இருக்கு , அதுதான் தமிழ்நாடு
ஆமாம்
இவனுக போராடுவது ஒரே நோக்கம், காவேரியில் நியாயம் வேண்டும் எனும் ஒரே நோக்கம்ஆனால் ஆளாளுக்கு ஒவ்வொரு தேதியில் கடை அடைப்பு, பஸ்மறியல் என போராடுவார்களாம், ஏன் ஒன்றாக போராடினால் என்ன? ஒன்றாக வரவே மாட்டார்கள்.
ஏன்?
ஏன் என்றால் அப்படித்தான் அதுதான் அரசியல். ஒவ்வொருவனுக்கும் அடுத்தவன் மேல் சந்தேகம், எல்லோருக்கும் எல்லா பயலும் என்பின்னால்தான் வரவேண்டும் என ஆசை. அதான் இப்படி ஒவ்வொருவனாக ஆளுக்கொரு பக்கம் இருந்து கத்துறானுக..
இது என்னாகும்?
இன்றும் ஆகாது, இவனுக தினமும் ஒவ்வொருவனா கடை அடையுங்கள், பஸ்ஸை மறியுங்கள் என கிளம்ப ஏற்கனவே வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் மக்கள் அவர்களாகவே இவனுகளை “எங்களை பொழைக்க விடுங்கடா, வாழ விடுங்கடா” என இழுத்து போட்டு சாத்துவார்கள்
அப்படியா?
நிச்சயம் நடக்கும், இவனுக பல கோஷ்டியா செய்யும் அட்டகாசத்தை பார்த்து தமிழக மக்களுக்கே அவனுக மேல வெறுப்பு வரும்
அப்படி வந்துட்டா நாம கால் ஊன்றமுடியுமா பாஸ்?
நாம ஏன் அங்கே போகணும்? எவன் ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு அடிமைதான். அப்படியும் முரண்டு பிடிச்சா மத்தியில் மந்திரி பதவி கொடுத்தோம்னு வச்சிக்க, அப்படியே கால சுத்திட்டு கிடப்பானுக